துபாயில் VPN மூலம் தடை செய்யப்பட்ட இலவச கால் செய்பவர்களுக்கான எச்சரிக்கை பதிவு!
VPN ( Virtual Private Network) என்பது ஒருவர் இணைய தளத்தை பார்வையிடும் போது அவருக்கும் அந்த இணையதளத்திற்கும் இடையேயான தகவல் பரிமாற்றத்தை பிறர் பார்வையில் இருந்து மறைத்து பாதுகாப்பான இணைப்பை வழங்கும் சேவை.
இதன் மூலம் பொது இடங்களில் உள்ள இனைய தள இணைப்பை பயன்படுத்துவோர் பாதுகாப்பான முறையில் தங்களது மின்னஞ்சல்களை பார்வையிடவோ வங்கியில் பண பரிவர்த்தனைகள் செய்யவோ இயலும்.
முன்னதாக இந்த சட்டம் மூலம் *VPN* பயன்படுத்தி இணையதள குற்றம் புரிபவர்களை மட்டுமே கைது செய்ய முடியும் என்றும் தற்போது மாற்றியமைக்கப்பட்ட இந்த சட்டம் மூலம் *VPN* பயன்படுத்தும் எவரையும் கைது செய்ய முடியும் என்று அமெரிக்காவை மையமாக கொண்ட *Private Internet Access* அமைப்பு தெரிவித்துள்ளது._
இந்த சட்டத்தின் படி அமீரகத்தில் தடை செய்யப்பட்டிருக்கும் எந்த ஒரு தளத்தையும் VPN பயன்படுத்தி பார்த்தால் அது குற்றமாகக் கருதப்படும். தற்போது அமீரகத்தில் வசிக்கும் மக்களில் அதிகம் பேர் அப்பகுதியில் தடை செய்யப்பட்டிருக்கும் அலைபேசி செயலிகளை பதிவிறக்க VPN ஐ பயன்படுத்தி வருகின்றனர்.
Many service providers, especially mobile applications for free * Voip * Emirates is prohibited. VPN service that most people are using these applications to be downloaded.
இது போன்ற VOIP சேவைகள் மூலம் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை தவிர்க்க இத்தகைய சட்டங்கள் ஏற்ப்படுத்தப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பொதுவாக இணையதளம் பயன்படுத்தோவோரின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தபடுவது தான் இந்த VPN சேவை. பெரும் நிறுவனங்கள் பல தங்களது பணியாளர்களை தகவல் பாதுகாப்பிற்காக VPN பயன்படுத்த அறிவுறுத்தும் இந்த வேலையில் தொலை தொடர்பு நிறுவனங்களின் பேராசைக்காக மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் அமீரகத்தின் இந்த சட்டம் அதிர்ச்சியை தருகிறது.
Comments
Post a Comment