வாட்ஸ்அப் மெசேஜ்-களை ஆன்லைன் செல்லாமல் வாசிப்பது எப்படி?
மிகவும் இலகுவாகவும் வேகமாகவும் எம்முடைய உறவினர் நண்பர்களை தொடர்பு கொள்ள உதவும் இந்த சேவைகள், பல்வேறு பயனுள்ள வசதிகளை எமக்கு வழங்குகிறது.
இந்த அனைத்து சேவைகளும் தமது பயனர்களுக்கு வழங்கும் பொதுவான ஒரு சேவையாக, நீங்கள் குறிப்பிட்ட ஒருவருக்கு அனுப்பிய செய்தியை அவர் படித்து விட்டாரா என்பதை தெரிந்து கொள்வதும், அப்படி அவர் எமது செய்தியை படித்து விட்டால், அந்த செய்தி எப்போது படிக்கப்பட்டது என்ற நேரத்தை தெரிந்து கொள்ளும் வசதியையும் குறிப்பிடலாம்.
இந்த வசதியானது மிகவும் பயனுள்ள ஒன்றாக காணப்படுகின்ற போதிலும், சில சமயங்களில் நாம் குறிப்பிட்ட ஒரு தகவலை படித்தது அனுப்பியவருக்கு தெரியக்கூடாது என்ற ஒரு தேவை ஏற்படலாம்.
ஆகவே இன்றைய பதிவில் ஒரு உங்களுடைய வாட்ஸ்அப் மெசேஜ்களை எப்படி ஆன்லைன் செல்லாமலேயே வாசிப்பது என்றும் வாசித்து முடித்த பின் தோன்றும் நீல நிற மெசேஜ் சீன் டிக்கை எப்படி மறைப்பது என்றும் பார்ப்போம்.
ஆன்லைன் செல்லாமல் வாட்ஸ்அப் மெசேஜ்-களை வாசிப்பது எப்படி?
முதலாவதாக கீலே தறப்பட்டிருக்கும் வாட்ஸ் அப் ஆன்லைன் ஹைடர் செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து கீழே படத்தில் குறித்து காட்டியிருப்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து தோன்றும் திரையில் வாட்ஸ்அப் நண்பர்களின் மெசேஜ்-ஐ மட்டும் இந்த முறையில் வாசிக்க வேண்டுமா அல்லது வாட்ஸ்அப் குழுக்களின் மெசேஜ்-களையும் இந்த முறையை பயன்படுத்தி வாசிக்க வேண்டுமா என்பதை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
அடுத்து உங்களது ஸ்மார்ட் போனில் கீழே காட்டப்பட்டிருப்பது போல் திரை ஒன்று தோன்றும். உங்களது வாட்ஸ்அப்-இற்கு வரும் மெசேஜ்-களை இந்த செயலி மூலம் திறந்து வாசித்துக்கொள்ள முடியும்.
ஆகவே மிக இலகுவாக ஆன்லைன் செல்லாமல் வாட்ஸ் அப் மெசேஜ் களை வாசிக்க உதவும் வாட்ஸ் அப் ஆன்லைன் ஹைடர் செயலியை
செய்து இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.
Comments
Post a Comment