பிறப்பு இறப்பு சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் எவ்வாறு பெறுவது..?
வணக்கம் நண்பர்களே இன்று ஒரு பயனுள்ள தகவலோடு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
இப்போது இணையம் சேவை உலகெங்கும் பெரும் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. அந்த வகையில் இப்போது எல்லாமே ஆன்லைன் மூலம் பெறலாம்.
பிறப்பு இறப்பு சான்றிதழ்களை எப்படி ஆன்லைன் மூலம் பெறலாம் என்பதை காணலாம். இதில் நாம் முழுவதுவாக ஆன்லைன் மூலம் பதிவு செய்ய இயலாது ஆனால் பிறப்பு இறப்பு சான்றிதழ்களை print out எடுத்து கொள்ளலாம்.
சான்றிதழ்களை பெற:
இந்த இணைப்பினை கிளிக் செய்து முதலில் open செய்யுங்கள் உங்களுக்கு திரையில் கீழ்கண்டவாறு தோன்றும்
இதில் உங்களுக்கு முதலில் birth certificate வேண்டுமெனில் birth certificate எனும் button ஐ கிளிக் செய்யுங்கள் இப்போது திரையில் கீழ்கண்டவாறு தோன்றும்
பிறகு submit என்பதை கிளிக் செய்யுங்கள் இப்போது உங்களை போலவே பலர் அந்த தேதியில் பதிவு செய்திருக்கலாம் அதில் உங்களுக்கு தேவையான பெயர் வருகிறதா என்று பாருங்கள்.
அப்படி வராத பட்சத்தில் அதில் advanced search என்பதை பயன்படுத்தி பாருங்கள் அப்படியும் வரவில்லை என்றால் கவலை வேண்டாம் பதிவு அலுவலகத்தில் சில சமயங்களில் information களை update செய்திருக்க மாட்டார்கள் ஒரு சில நாட்கள் கழித்து இதே போல் தேடி பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு தேவையானது கிடைக்கும்.
இதே போல தான் death certificateம் எளிதாக ஆன்லைன் மூலம் பெற்றுகொள்ளுங்கள்.
Comments
Post a Comment