Google Chrome மெதுவாக இருக்கிறதா? இதோ 4 டிப்ஸ்,



தற்போது அனைவராலும் பரவலாக பயன்படுத்தப்படும் 'பிரவுசர்' என்றால் அது Google Chrome தான்.
இணையப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் பிரவுசர்களில் 99 சதவீத மக்களின் தேர்வு கூகுள் குரோமாக தான் இருக்கிறது.

இதன் செயல்திறன் மற்ற பிரவுசர்களை விட சிறப்பாக இருப்பதால் பயன்பாட்டார்களால் பெரிதும் விரும்பப்படுகிறது. ஆனால் சில சமயங்களில் இதுவே நமது பொறுமையை அதிகமாக சோதித்தி விடும்.

அந்த அளவு மெதுவாக இருக்கும். இதனை மீண்டும் பழையை நிலைக்கு கொண்டு வர சில வழிகள் இருக்கிறது.
உங்களது கூகுள் குரோமில் extensions உள்ள தேவையற்ற லிங்குகளைஅகற்றிவிடுங்கள்.

அதிக்கப்படியான லிங்குகள் பிரவுசர் செயல்பாட்டை குறைக்கும். இதற்கு More tools-> Extensions சென்று சரிசெய்யலாம் அல்லது Shift Esc மூலம் தோன்றும் Task manager box மூலம் சரி செய்யலாம்.

அதிகப்படியான extensions பயன்படுத்துவதை விட்டுவிட்டு சில பயனுள்ள extensions மட்டும் பயன்படுத்தலாம். Data Saver extension உங்கள் பிரவுசரில் எந்த அளவு மெமரி உள்ளது என்பதை காட்டும். இதேபோல் OneTab, Tab Suspender மற்றும் The GreatSuspender போன்ற பயனுள்ள extensions மட்டும் பயன்படுத்தலாம்.
குரோமில் உள்ள சில இணையத்தளங்களின் plug-ins-களை அகற்றி விடுங்கள்.

இது அந்த இணையத்தளங்களை சரியாக காட்டாவிட்டாலும், வேகத்தை அதிகரிக்கும். அதேபோல் சில வீடியோக்களை தானாகவே ஓடவிடும் plug-insகளை அகற்றிவிடுங்கள். இதனை chrome://plugins என டைப் செய்து சரி செய்யலாம்.

Browsing dataவில் உள்ள சிலவற்றை அடிக்கடி அழித்து வந்தால் கூகுள் குரோம் எப்போதும் வேகமாக இருக்கும். இதில் cache பகுதியை அழித்து வந்தால் பிரவுசர் வேகமாக செயல்படும். இதற்கு Chrome Settings-> advanced settings->Clearbrowsing data சென்று cache, cookies, browsing data என அனைத்தையும் அழிக்க முடியும்.


♻மேலும் தொடர்ச்சியான பதிவுகள் மற்றும் புதிய செயலி கள் மற்றும் Android Tricksகளை  காண எமது பக்கத்தில் வருகை தாருங்கள்.

 Šmãrt Håçkêr Tëãm

🎄புதிய தொழில்நுட்பத் தகவல்கள்🎄

Website Blog:

Facebook Page


Comments

Popular posts from this blog

ஒருவர் பேசும் அழைப்புக்களை ஹேக் செய்து எமது போனில் இருந்து கேட்பது எப்படி?

Facebook அறிமுகம் செய்ய இருக்கும் புதிய Exprees Wifi வசதி...!

வாட்ஸ் அப் உரையாடல்களை அழித்துவிட்டாலும் அது முற்றிலுமாக அழியாது :  டிஜிட்டல் தடயவியல் விஞ்ஞானி தகவல்