ஆன்ராயிடு போனில் அதிகளவில் மொபைல் டேட்டா வீணடிக்கப்படுகிறதா? இதோ தீர்வு..!
ஸ்மார்ட் போன்களுடன் சம்மந்தப்பட்ட மற்றுமொரு பயனுள்ள பதிவுடன் இன்று உங்களை சந்திக்கிறேன். ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வரும் பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினையாக, தங்களுடைய போன் டேட்டா தங்களுக்கே தெரியாமல் மிகவும் சீக்கிரமாக முடிவடைந்து போவதை குறிப்பிடலாம்.
எமது ஸ்மார்ட் போனில் நாம் பயன்படுத்தும் டேட்டா பேக் மிக விரைவாக முடிவடைந்து போவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அவற்றிலே பொதுவான சில காரணங்களாக கீழ் குரிப்பிட்டுள்ளவைகளை கூறலாம்.
எமது ஸ்மார்ட் போனில் இருக்கும் செயலிகள் தானாக அப்டேட் ஆவது.
குறிப்பிட்ட சில தளங்களுக்கு செல்லும் பொது அதிகளவான டேட்டா வீணடிக்கப்படுவது,
எமது போனில் இருக்கும் செயலிகள் இன்டர்நெட் உடன் இணைந்து தேவையில்லாமல் எமது டேட்டாவை அப்லோட் செய்வது.
ஆகவே மேலே குறிப்பிட்ட எதோ ஒரு காரனத்தினால், எமது ஸ்மார்ட் போனில் இருக்கும் டேட்டா எமக்கு தெரியாமலேயே குறிப்பிட்ட ஏதோ ஒரு காரணத்தினால் வீணடிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது. ஆகவே இன்றைய பதிவில் எமது ஆன்ராயிடு ஸ்மார்ட் போனில் இருந்து தேவையில்லாமல் வீணடிக்கப்பட்டு கொண்டு இருக்கும் டேட்டாவை கட்டுப்படுத்துவது எப்படி என்று பார்ப்போம்.
அதாவது உங்களது போனில் இருக்கும் அனைத்து செயலிகளிலும் எந்த எந்த செயலிகள் இணையத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை தீர்மானிப்பதன் மூலம் போன் டேட்டா வீணடிக்கப்படுவதை தடுப்பது எப்படி என்று பார்ப்போம்.
போன் டேட்டா வீணடிக்கப்படுவதை தடுப்பது எப்படி?
முதலாவதாக கீலே தறபட்டிருக்கும் போன் டேட்டாவை கட்டுப்படுத்த கூடிய செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை போனில் ஆரம்பித்தால் அங்கே உங்களது போனில் இருக்கும் அனைத்து செயலிகளும் பட்டியலிடப்பட்டு காட்டப்படும்.
அங்கே காணப்படும் செயலிகளில் உங்களுக்கு தேவையான செயலிகளை மட்டும் இன்டர்நெட் உடன் இணைய அனுமதி வழங்குவதட்கான வசதி கிடைக்கும். அதாவது குறித்த ஒரு செயலியை கிளிக் செய்வதன் மூலம் அந்த செயலி மொபைல் டேட்டா மூலம் இன்டர்நெட் உடன் இணைய வேண்டுமா அல்லது வைபை மூலம் மட்டும் இன்டர்நெட் உடன் இணைய வேண்டுமா என்பது போன்ற பல்வேறு தெரிவுகளை மேட்கொள்ள முடியும்.
ஆகவே மிக இலகுவாக எமது போனில் இருந்து வீணடிக்கப்படும் மொபைல் டேட்டாவை கட்டுப்படுத்த உதவும் இந்த ஆன்ராயிடு செயலியை
இங்கே கிளிக் செய்து
கூகுள் ப்லே ஸ்டோரிலே இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும். ஆனால் இந்த செயலியின் இலவச பதிப்பில் குறிப்பிட்டளவான வசதிகள் மட்டுமே காணப்படுகின்றன. அதனால் இந்த செயலியின் பனம் செலுத்தி பெற வேண்டிய பதிப்பை கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி பெற்றுக்கொள்ள முடியும்.
Net Guard Pro Version Download Link
♻மேலும் தொடர்ச்சியான பதிவுகள் மற்றும் புதிய செயலி கள் மற்றும் Android Tricksகளை காண எமது பக்கத்தில் வருகை தாருங்கள்.
Šmãrt Håçkêr Tëãm
🎄புதிய தொழில்நுட்பத் தகவல்கள்🎄
Website blog:
https://smarthackerteam.blogspot.in/?m=1
Facebook page:
https://m.facebook.com/SmartHackerTeam
Comments
Post a Comment