உங்களது லெப்டொப் திருட்டு போனால் கண்டு பிடிப்பது எப்படி?
உங்களது மடிக்கணணியுடன் சம்மந்தப்பட்ட ஒரு பாதுகாப்பு விடயத்தை பற்றி பார்ப்போம். இன்றைய கால கட்டத்தில் திருட்டு என்பது சமூகத்தில் தலைவிரித்தாடும் ஒரு விடயமாக மாறி விட்டது. எங்கு பாத்தாலும் திருட்டு..! எதில் பார்த்தாலும் திருட்டு என்றாகிவிட்டது.
சாதாரணமாக எம்முடைய ஏதேனும் ஒரு பொருள் திருட்டு போனால் போலீஸில் முறைப்பாடு ஒன்றை பதிவிடுவது வழக்கம். ஆனால் எம்முடைய ஸ்மார்ட் போன் அல்லது இணையத்தை பயன்படுத்த உதவும் ஏதேனும் டிவைஸ்-கள் திருட்டு போனால், போலீஸுக்கு செல்லும் முன்னரே குறித்த டிவைஸ்-களில் காணப்படும் ட்ரெக்கிங் செயலிகள் மூலம் குறித்த டிவைஸ்-ஐ கண்டுபிடிக்கும் அளவுக்கு ட்ரெக்கிங் செயலிகளும் மென்பொருட்களும் இன்று அறிமுகமாகி விட்டன.
எமது தளத்தில் ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் திருட்டு போனால் திருடியது யார் என்பதை அவர்களது போட்டோவுடன் மிக இலகுவான முறையில் கண்டுபிடித்து கொள்வது எப்படி என்பது பற்றிய பதிவொன்று எழுதப்பட்டு இருந்தது. அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லிங்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஆகவே இதோ போல இன்றைய பதிவிலே எமது லேப்டொப் காணாமல் போனால் அல்லது திருட்டு போனால் கண்டுபிடிப்பது எப்படி என்று பார்ப்போம். அதவாது உங்களது திருட்டு போன மடிக்கணனி ஆன் செய்யப்படும் போது/ இன்டர்நெட் உடன் இணையும் போது குறித்த மடிக்கணனி எந்த இடத்தில் இருக்கிறது என்பதை துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும்.
திருட்டு போன லாப்டொப்-ஐ கண்டுபிடிப்பது எப்படி?
முதலாவதாக கீலே தறபட்டிருக்கும் தழத்தில் சென்று உங்களுக்கான கனக்கொன்றை ஆரம்பித்த பின்னர், லெப்டொப்-ஐ ட்ரேக் செய்வதட்கான ட்ரெகிங் மென்பொருளை உங்களது லெப்டொப்-க்கு பெற்றுகொல்லுன்கள்.
நீங்கள் விண்டோஸ் இயங்குதளத்தை பயன்படுத்துகிறீர்கள் என்றால் விண்டோஸ்-இட்கான ட்ரெக்கிங் மென்பொருளை தெரிவு செய்யுங்கள்.
அவ்வளவு தான்..! இப்போது உங்களது மடிக்கணனி தொலைந்து போனாலோ அல்லது திருடப்பட்டாலோ மிக இலகுவாக
இங்கே கிளிக் செய்து
ட்ரெக்கிங் தளத்திட்கு சென்று அங்கே நீங்கள் ஏற்கனவே உருவாக்கிய கணக்கு மூலம் லொகின் செய்து உங்களது மடிக்கணனி இருக்கும் இடத்தை துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும்.
Comments
Post a Comment