Viber மூலம் இனி அனிமேஷன் படங்களையும் பகிரலாம்!

மிகச்சிறந்த Messenger  சேவைகளுள் ஒன்றான Viber சேவையில் அடிக்கடி பல அட்டகாசமான வசதிகள் ஏற்படுத்தப்படுவதுண்டு.

அந்த வகையில் அதன் புதிய பதிப்பில் வாட்ஸ்அப் சேவையில் இதுவரை வழங்கப்படாத மற்றுமொரு வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வைபர் சேவையின் புதிய பதிப்பானது அனிமேஷன் புகைப்படங்களையும் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள வழிவகுத்துள்ளது. அத்துடன் இதன் புதிய பதிப்பு மூலம் வைபர் மெசெஞ்சரில் இருக்கும் செய்திகளையும் Backup செய்துகொள்ள முடியும்.

கீலுள்ள இணைப்பு மூலம் வைபர் செயலியின் புதிய பதிப்பை தரவிறக்கிக் கொள்ளலாம்.

வைபர் டெலிகிராம் உள்ளிட்ட மேலும் பல பிரபலமான மெசேஜிங் சேவைகள் மூலம் இவ்வாறான அனிமேஷன் புகைப்படங்களை பகிர்ந்துகொள்ள முடிந்தாலும் வாட்ஸ்அப் சேவையில் இந்த வசதி இதுவரை வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

ஆன்ராயிடு போனில் அதிகளவில் மொபைல் டேட்டா வீணடிக்கப்படுகிறதா? இதோ தீர்வு..!

ஏர்டெல் அதிரடி அறிவிப்பு : 10GB 4G இண்டர்நெட் ரூ.250 சலுகை...!