Facebook Messenger மூலம் குறுஞ்செய்திகளை (SMS) அனுப்புவதும் பெறுவதும் எப்படி?
ஆரம்பத்தில் பேஸ்புக் செயலி மூலமே நண்பர்களுடன் அரட்டையடிக்கவும் (Chatting) முடிந்தது.
என்றாலும் தற்பொழுது பேஸ்புக் மெசெஞ்சர் வேறு பேஸ்புக் செயலி வேறு என இரு வேறாக அதன் சேவைகளை வழங்கி வருகிறது.
அந்தவகையில் பேஸ்புக் மெசெஞ்சர் சேவையானது வெறும் அரட்டை அடிப்பதற்கு மாத்திரமின்றி காலநிலை தகவல்களை அறிந்துகொள்வது உட்பட இன்னும் ஏராளமான பல வசதிகளை பெற்றுக்கொள்ள உதவுகிறது.
தற்பொழுது பேஸ்புக் மெசெஞ்சர் மூலமே குறுஞ்செய்திகளை நிர்வகிப்பதற்கான வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வசதியை நீங்களும் பெற்றுக்கொள்ள விரும்பினால் கீலே வழங்கப்பட்டுள்ள இணைப்பு மூலம் பேஸ்புக் மெசெஞ்சர் செயலியை புதிய பதிப்பிற்கு மேம்படுத்திக்கொள்க.
பின்னர் பேஸ்புக் மெசெஞ்சர் செயலியின் அமைப்புகளுக்கான பகுதியில் SMS என்பதை தெரிவு செய்து Default SMS app என்பதை செயற்படுத்திக் கொள்க.
அவ்வளவு தான்.
இனி உங்கள் ஸ்மார்ட்போனுக்கு வரும் அனைத்து குறுஞ்செய்திகளையும் பேஸ்புக் மெசெஞ்சர் மூலமே நிர்வகிக்கலாம்.
பேஸ்புக் நண்பர்களுடன் நீங்கள் மேற்கொள்ளும் அரட்டைகளை வழமை போல் அடையாளம் காண முடிவதுடன் குறுஞ்செய்திகளை இலகுவாக அடையாளம் காண்பதற்கு அவைகள் ஊதா நிறத்தால் அடையாளப்படுத்தி தரப்பட்டுள்ளன.மேலும் உங்களுக்கு புதிய குறுஞ்செய்திகள் கிடைக்கும் போது அவற்றை Chat Heads வசதி மூலமும் அறிந்து கொள்ளலாம்.
பேஸ்புக் மெசெஞ்சர் செயலியை புதிய பதிப்பிற்கு மாற்றிய பின்னரும் குறுஞ்செய்திகளை பேஸ்புக் மெசெஞ்சர் மூலம் பெற முடியாவிட்டால் உங்கள் ஸ்மார்ட்போனில் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று General > Default Application எனும் பகுதியின் ஊடாக Messages என்பதை தெரிவு செய்து பேஸ்புக் மெசெஞ்சர் செயலியை தெரிவு செய்க.
Comments
Post a Comment