ஏர்டெல் 2G/3G சிம் மூலம் இன்டர்நெட்-ஐ இலவசமாக பயன்படுத்துவது எப்படி?
எமது வாசகர்களுக்காக இன்று மற்றுமொரு இலவச இன்டர்நெட் உபாயம் பற்றிய பதிவொன்றை எழுதலாம் என்று நினைக்கின்றேன். ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவோரிட்கு இருக்கும் பொதுவான பிரச்சினை தங்களுடைய டேட்டா பேக் சீக்கிரமாக தீர்ந்து போவது. இதற்கு மிக முக்கிய காரணமாக எமது போனில் இருக்கும் செயலிகள் தானாக அப்டேட் செய்யப்படுவதும் அதே போல் ஸ்மார்ட் போன் ஊடான எமது டேட்டா பாவனை அதிகளவில் இருப்பதையும் குறிப்பிடலாம்.
சரி.. இன்றைய பதிவில் ஏர்டெல் சிம் பாவனையாளர்களுக்கான சிறந்ததொரு இன்டர்நெட் ஹேக்-ஐ சொல்லி தருகிறேன்.
இந்த முறையை பயன்படுத்தி உங்களது ஆன்ராயிடு போனில் இருந்து ஏர்டெல் 2G அல்லது 3G சிம் மூலமாக எவ்வளவு வேண்டுமானாலும் இன்டர்நெட்-ஐ இலவசமாக பயன்படுத்தி கொள்ள முடியும்.
குறிப்பு
இந்த உபாயத்தை உங்களது ஆன்ராயிடு போனில் செயற்படுத்த வேண்டும் என்றால் உங்களது போன் பேலன்ஸ் 0 ஆக இருப்பதோடு டேட்டா பேலன்ஸ்-உம் 0 ஆக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலாவதாக கீழே வழங்கப்பட்டிருக்கும் ஆன்ராயிடு போனுக்கான வி.பி.என் செயலியை உங்களது போனுக்கு பெற்றுக் கொள்ளுங்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து, அதிலே கணக்கொன்றை திறந்து கொள்ளுங்கள்.
அடுத்து மேலே வலது மூலையில் காணப்படும் செட்டிங்க்ஸ் ஐகான்-ஐ கிளிக் செய்யுங்கள்.
அடுத்து Connection Protocol என்று இருப்பதை கிளிக் செய்யுங்கள்.
அதிலே கீழே படத்தில் காட்டியுள்ளவாறு,
Host என்பதில் one.airtel.in
X-Online-Host என்பதில் one.airtel.in
என்று டைப் செய்து OK என்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து ஹோம் ஸ்க்ரீன்-இற்கு திரும்ப வந்து Connect என்பதை கிளிக் செய்யுங்கள்.
அவ்வளவு தான்.. இப்போது உங்களது ஏர்டெல் சிம்-இல் இருந்து இலவசமாக இன்டர்நெட்-ஐ பயன்படுத்த கூடியதை இருக்கும்.
ஆகவே ஆன்ராயிடு போன் மூலம் ஏர்டெல் சிம் ஊடாக இலவசமாக இன்டர்நெட் இணைப்பை பயன்படுத்த உதவும் வி.பி.என் செயலியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்.
இது ஒரு இலவச இன்டர்நெட் உபாயம் என்பதால், இந்த உபாயம் எத்தனை நாட்கள் வரை எதுவிதமான பிரச்சினையும் இல்லாமல் வேலை செய்யும் என்பது தெரியாது.
நான் பரீட்ச்சித்து பார்த்த வரையில் இந்த உபாயம் தற்போது வரை சிறப்பாக செயற்படுகிறது. ஆகவே நீங்களும் முயற்சித்து பாருங்கள்.
Comments
Post a Comment