YouTube மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி..?


இண்டர்நெட் பற்றிய விழிப்புணர்வு இருந்தால் இன்று யாரும் தொழில் அதிபர் தான், இண்டர்நெட் மூலம் இன்று எதையும் செய்ய முடியும் என்றாகிவிட்ட போது பணம் சம்பாதிப்பது மட்டும் கடினமா என்ன...!

குழம்ப வேண்டாம் இண்டர்நெட் மூலம் பணக்காரர் ஆவது எப்படி என்பதை தான் இங்கு நீங்கள் அறிந்து கொள்ள போகின்றீர்கள்.
அதாவது கூகுளின் யூட்யூப் இணையதளத்தின் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..!

இண்டர்நெட்

அதிக சிரமம் இல்லாமல் சரியான உழைப்பு, புத்திசாலித்தனத்தை முதலீடாக கொண்டு அதிக வருமானம் பெற யூட்யூப் சேனல் சிறப்பான தேர்வாக இருக்கும்.
   
சேனல்

கூகுள் அல்லது YouTube Account துவங்கி புதிய சேனல் துவங்க வேண்டும். துவங்கும் போது யூஸர் பெயரை பிரபலமானதாகவும், பலரும் விரும்பும் ஒன்றாகவும் இருந்தால் நல்லது.

வீடியோ

அதிக தரம் கொண்ட வீடியோக்களை உங்களது சேனலில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தொடர்ச்சியாக வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் போது அதிகளவிலான மக்கள் உங்களது சேனலை பின் தொடர்வார்கள்.
   
மானிடைசேஷன்

அதிக பார்வையாளர்களை பெற்று மானிடைசேஷனினை அதிகரிக்க வேண்டும். உங்களது வீடியோக்களை சமூக வலைதளங்களில் முடிந்த வரை பகிர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
பதில்
முடிந்த வரை பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பது பார்வையாளர்களின் எண்ணிக்கையை வெகுவாக அதிகரிக்கும்.
  

மானிடைசேஷன்

உங்களது சேனலின் மூலம் பணம் சம்பாதிக்க மானிடைசேஷனினை எனேபிள் செய்ய வேண்டும், இவ்வாறு செய்தால் யூட்யூப் விளம்பரங்கள் உங்களது வீடியோக்களில் வழங்கப்படும். இதோடு உங்களது வீடியோ முழுக்க முழுக்க உங்களுக்கு மட்டுமே சொந்தமானதாக இருப்பதும் அவசியமாகும்.
   
வீடியோ

வீடியோக்களை பதிவேற்றம் செய்தவுடன் வீடியோ மேனேஜர் சென்று உங்களுக்கு மானிட்டைஸ் செய்ய வேண்டிய வீடியோவில் ''Monetize with Ads' பட்டனை க்ளிக் செய்து மானிடைஸ் வித் ஆட்ஸ் என்ற ஆப்ஷனில் சரி பார்க்க வேண்டும். 
   
கூகுள் ஆட் சென்ஸ்

ஆட் சென்ஸ் இணையதளத்திற்கு சென்று கூகுள் ஆட் சென்ஸ் செட் செய்து கொள்ளலாம். சைன் அப் நௌ பட்டனை க்ளிக் செய்து உங்களுக்கான அக்கவுண்டினை துவங்க வேண்டும்.
   
தேவையானவை

கூகுள் ஆட் சென்ஸ் பெற உங்களது வயது 18 மற்றும் அதற்கும் அதிகமாக இருக்க வேண்டும், பேபால் அல்லது வங்கி கணக்கு மற்றும் தகுந்த மின்னஞ்சல் முகவரி இருக்க வேண்டும்.
  

பணம்

ஆட் க்ளிக் எனப்படும் விளம்பரங்களில் கிடைக்கும் க்ளிக் மற்றும் பார்வையாளர்களுக்கு ஏற்ப கட்டணம் உங்களது வங்கி கணக்கில் போடப்படும்.

அனாலடிக்ஸ்

மானிடைஸ் செய்யப்பட்ட வீடியோ உங்களிடம் இருந்தால் உங்களது வீடியோ எவ்வாறு வேலை செய்கின்றது என்பதை அனாலடிக்ஸ் மூலம் தெரிந்து கொள்ள முடியும், இங்கு உங்களுக்கு வர இருக்கும் பணம், செயல்பாடு, வீடியோக்களின் பார்வை எண்ணிக்கை போன்றவைகளை பார்க்க முடியும்.
   
விளம்பரம்

உங்களது வீடியோக்களை தனியே இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களின் மூலம் விளம்பரம் செய்யலாம், இதன் மூலம் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும், அதே சமயம் பணமும் அதிகம் கிடைக்கும்.
   
பங்குதாரர்

யூட்யூப் தளத்தில் பங்குதாரர் ஆவதன் மூலம் அதிக சலுகைகள், வளர்ச்சி திட்டங்கள் மற்றும் சில யோசனைகளை பெற முடியும், இதை பெற அதிக பார்வையாளர்கள் மற்றும் அதிக வீடியோக்களை பதிவேற்றம் செய்திருக்க வேண்டும்.
   
முயற்சி

மக்கள் விரும்பும் வீடியோக்கள், அதிக தரம் மற்றும் தொடர்ச்சியான பகிவேற்றம் செய்வதன் மூலம் யூட்யூப் தளத்தில் வெற்றி பெற முடியும்.
   
முகநூல்

இது போன்ற மேலும் பல செய்திகளுக்கு புதிய தொழில்நுட்பத் தகவல்கள்  முகநூல் பக்கம்.

Comments

TamilTechToday said…
YouTube Google Adsense Training @ http://chennaiyoutube.blogspot.in/
Unknown said…
பணம் சம்பாதிக்க யாராலும் முடியாமல் இல்லை. ஆனால் பலருக்கும் அதற்கான வழிகள் தெரியவில்லை என்பது தான் உண்மை. பணத்தைப் பற்றிய கல்வி நமக்கு இல்லாததாலும், பணத்தைப் பொறுத்த நம் கண்ணோட்டம் தவறாக இருப்பதாலும் தான் பணம் என்பது இன்று நமக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. நம் முன்னோர்கள் அல்லது நமது குடும்பத்தில் உள்ளவர்கள் நமக்கு சொல்லிக்கொடுத்தவற்றை வைத்தே நாம் பணம் சம்பாதிப்பதைப்பற்றி யோசிக்கிறோம். ஆனால் காலம் காலமாக வேலை செய்வதற்கு சொல்லிக்கொடுத்த அளவிற்கு யாரும் நமக்கோ அல்லது நமது முன்னோர்களுக்கோ பணம் சம்பாதிப்பதைப்பற்றி சொல்லிக்கொடுக்கவில்லை என்பது தான் உண்மை. இன்று நம்மில் பலர் வறுமையில் இருப்பதற்குக் காரணம் பணம் பற்றிய அறிவு இல்லாததே ஆகும். பணக்காரர்கள் தங்கள் வாரிசுகளுக்கு மட்டுமே கற்றுத் தரக்கூடிய பணம் சேர்க்கும் வித்தைகளை ஒருசிலர் மட்டுமே உலகத்திற்கு எடுத்துக்கூறி உள்ளனர். அந்த இரகசியங்களை எங்கு, எப்படிப் பெறுவது என்பதை அறிய விரும்பினால் secretsinmoneymaking@yahoo.com என்ற முகவரிக்கு இ-மெயில் அனுப்பவும்.
Rajeshbabu said…
My web channel video..
https://m.youtube.com/watch?v=xTExhpC8nLY
Anonymous said…
அருமையான பதிவுகள் நண்பா
ஆங்கிலம் சரளமாக தெரிந்திருக்க வேண்டுமா?

Popular posts from this blog

ஒருவர் பேசும் அழைப்புக்களை ஹேக் செய்து எமது போனில் இருந்து கேட்பது எப்படி?

Facebook அறிமுகம் செய்ய இருக்கும் புதிய Exprees Wifi வசதி...!

வாட்ஸ் அப் உரையாடல்களை அழித்துவிட்டாலும் அது முற்றிலுமாக அழியாது :  டிஜிட்டல் தடயவியல் விஞ்ஞானி தகவல்