600 GB DATA Rs.500 மட்டுமே Jio வின் அடுத்த அதிரடி Offer..!
ஸ்மார்ட்போன்களுக்கு ஜியோசேவைகளை அறிமுகம் செய்து ஒட்டு மொத்த இந்தியாவையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது ரிலையன்ஸ் ஜியோ. டிசம்பர் 31 ஆம் தேதி வரை வரம்பற்றஇணைய வசதி, வாய்ஸ் கால், குறுந்தகவல் சேவைகளை அறிவித்திருக்கின்றது.
இத்துடன் மற்ற நிறுவனங்களை விட 90 சதவீதம் வரை மிகக் குறைந்த விலையில் தனது சேவைகளை வழங்க இருப்பதாக ஜியோ அறிவித்தது. இந்நிலையில் அடுத்த அதிரடியில் ஜியோ இறங்கிவிட்டது.
ஜியோ ஜிகாஃபைபர் வரவேற்பு திட்டத்தின் மூலம் ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் டூ ஹோம் எனும் புதிய பிராட்பேன்ட் திட்டத்தினை தில்லி மற்றும் மும்பை வாடிக்கையாளர்களுக்குச் சோதனைக்கு வழங்கப்பட இருக்கின்றது.
இத்திட்டம் ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்பட்ட ஜியோ பிரீவியூ சோதனை போன்ற திட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜியோ ஜிகாஃபைபர் திட்டமானது வெகு விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் இந்தத் திட்டத்தின் கீழ் இண்டர்நெட் வேகம் நொடிக்கு 1 ஜிபி (1Gbps) வரை இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.
ஜியோ ஜிகாஃபைபர் பிராட்பேன்ட் திட்டத்தின் கீழ் வழங்கப்பட இருக்கும் சலுகைகளும் வெளியிடப்பட்டுள்ளன, அதன் படி ரூ.500/- செலுத்தி 600 ஜிபி டேட்டாவினை சுமார் 30 நாட்களுக்குப் பயன்படுத்த முடியும். மேலும் ரூ.500 செலுத்தி நாள் ஒன்றைக்கு 3.5 ஜிபி டேட்டாவினை சுமார் 30 நாட்களுக்குப் பயன்படுத்த முடியும்.
ரூ.400 செலுத்தினால் 24 மணி நேரத்திற்கு அன்-லிமிட்டெட் டேட்டா வழங்கப்படுகின்றது. இத்துடன் ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் பிராட்பேன்ட் திட்டங்கள் குறித்து பல்வேறு இதர திட்டங்களும் இணையத்தில் வலம் வருகின்றன.
ரூ.4000 செலுத்தும் போது நொடிக்கு 400 எம்பி வேகத்தில் 500 ஜிபி இண்டர்நெட் சுமார் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகின்றது. ரூ.3,500 செலுத்தும் போது நொடிக்கு 200 எம்பி வேகத்தில் 750 ஜிபி டேட்டா 30 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கின்றது. ரூ.5500 செலுத்தும் போது 300 ஜிபி டேட்டா நொடிக்கு 600 எம்பி என்ற வேகத்தில் வழங்கப்படுகின்றது.
இந்தியா முழுக்க சுமார் 100 நகரங்களில் ஜியோ ஜிகாஃபைபர் சேவை வழங்கப்பட இருப்பதாகவும் இதனைப் பயனர்கள் ரிலையன்ஸ் ஜியோ டிஜிட்டல் ஸ்டோர்களில் பெற முடியும். ஜியோ ஃபைபர் ரௌவுட்டர் வாடிக்கையாளர்கள் ரூ.6000 செலுத்தியும் வாங்க முடியும்.
பிராட்பேன்ட் பிரீவியூ சலுகையின் கீழ் பயனர்கள் நொடிக்கு 800 எம்பி என்றளவு வேகத்தில் இண்டர்நெட் சேவையை அனுபவிக்க முடியும். பொது வெளியீட்டிற்குப் பின் நொடிக்கு 1 ஜிபி என்ற வேகத்தில் இணையச் சேவை வழங்கப்பட இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
Comments
Post a Comment