Airtel அதிரடி அறிவிப்பு..! 90 நாட்களுக்கு 4G சேவை இலவசம்:



புதிதாகக் களம்  இறங்கியிருக்கும் ரிலையன்ஸ் ஜியோவின் போட்டியை சமாளிப்பதற்காக, தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு 90 நாட்களுக்கு 4G சேவை இலவசம் என்று ஏர்டெல் நிறுவனம் அதிரடி அறிவிப்பை  வெளியிட்டுள்ளது.



இது தொடர்பாக ஏர்டெல்லின் இந்தியா மற்றும் தெற்கு ஆசிய பிராந்திய செயல் இயக்குனர் அஜய் பூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது.

புதிதாக அறிமுகப்படுத்தப்படும் இந்த சலுகையானது ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு ரூ.1495 என்ற விலையிலும், புதிய வாடிக்கையாளர்களுக்கு ரூ.1494 என்ற விலையிலும் கிடைக்கும். 
  

4G வசதி கொண்ட அலைபேசிளை  பயன்படுத்துபவர்கள் அதிக அளவில் இணைய வசதியை பயன்படுத்துவதால், DATA அதிக அளவில் செலவாகும். இவர்களை மனதில் கொண்டுதான் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.



தற்போது தில்லி வட்டத்தில் அறிமுகமாகி உள்ள இந்த திட்டம்  வெகு விரைவில் பிற தொலைத்தொடர்பு வட்டங்களுக்கும் விரிவு செய்யபப்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Comments

Popular posts from this blog

ஒருவர் பேசும் அழைப்புக்களை ஹேக் செய்து எமது போனில் இருந்து கேட்பது எப்படி?

Facebook அறிமுகம் செய்ய இருக்கும் புதிய Exprees Wifi வசதி...!

வாட்ஸ் அப் உரையாடல்களை அழித்துவிட்டாலும் அது முற்றிலுமாக அழியாது :  டிஜிட்டல் தடயவியல் விஞ்ஞானி தகவல்