Jio வை சமாளிக்க ரூ.249க்கு Unlimited டேட்டா வழங்கும் B.S.N.L.!!


நாடு முழுக்க ஜியோஏற்படுத்தியிருக்கும் டேட்டா கட்டண புரட்சியைச் சமாளிக்க ஒவ்வொரு தொலைத்தொடர்பு நிறுவனமும் தன் பங்கிற்குச் சலுகைகளை வழங்கி வருகின்றது. சில நிறுவனங்கள் பழைய விலைக்குக் கூடுதல் டேட்டா, மற்றும் புதுவித சலுகைகளை அறிவித்து வருகின்றன.

 இந்நிலையில் பிஎஸ்என்எல்நிறுவனமும் இந்தப் போட்டியில் களம் இறங்கியுள்ளது. அதன் படி பிராட்பேண்ட் டேட்டா பயன்படுத்துவோர் அன்-லிமிட்டெட் சலுகைகளைக் குறைந்த கட்டணத்திற்கு அனுபவிக்க முடியும்.

பிராட்பேண்ட்:

மாதம் ஒன்றிற்கு 300 ஜிபி டேட்டா பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 1ஜிபி டவுன்லோடு கட்டணத்தினை ரூ.1க்குள் பெற முடியும். இந்தச் சலுகை வையர்லைன் பிராட்பேண்ட் பயனர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
  
4ஜி Data:

ரூ.50க்கு 1 ஜிபி 4ஜி டேட்டா வழங்கும் ஜியோவை எதிர்கொள்ளும் விதமாக பிஎஸ்என்எல் வையர்லைன் பிராட்பேண்ட் பயனர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை:

பிஎஸ்என்எல் பயனர்கள் அன்-லிமிட்டெட் பிராட்பேண்ட் டேட்டா சேவையினை ரூ.249க்கு பெற முடியும் என அந்நிறுவன செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  
சலுகை:

புதிய சலுகைகள் புதிய வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு பயனர்களுக்கு இவை புதுவித அனுபவமாகவும் இருக்கும் என பிஎஸ்என்எல் தலைவர் அனுபம் ஸ்ரீவஸ்தவா தன் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.

வரம்பற்ற Data:

புதிய திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் வரம்பற்ற டேட்டா டவுன்லோடுகளை மேற்கொள்ள முடியும். மேலும் பிஎஸ்என்எல் சார்பில் சுமார் 2 Mbps வேகம் வழங்க முடியும் என அந்நிறுவன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  
Download :

தொடர்ச்சியாகப் பயன்படுத்தும் போது வாடிக்கையாளர்கள் ரூ.249 மட்டும் செலுத்தி அதிகபட்சம் 300 ஜிபி வரை டவுன்லோடு செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  
குறைவு:

இவ்வாறு செய்யும் போது டேட்டா கட்டணம் ஜிபி ஒன்றிற்கு ரூ.1க்கும் குறைவாகவே இருக்கின்றது. ஆறு மாத பயன்பாட்டிற்கு பின் பயனர்கள் அவர்கள் விருப்பம் போல் வேறு திட்டத்திற்கு மாற்றப்படுவர்.

Comments

Popular posts from this blog

ஒருவர் பேசும் அழைப்புக்களை ஹேக் செய்து எமது போனில் இருந்து கேட்பது எப்படி?

Facebook அறிமுகம் செய்ய இருக்கும் புதிய Exprees Wifi வசதி...!

வாட்ஸ் அப் உரையாடல்களை அழித்துவிட்டாலும் அது முற்றிலுமாக அழியாது :  டிஜிட்டல் தடயவியல் விஞ்ஞானி தகவல்