வேகமாக ஸ்மார்ட் போனை சார்ஜ் செய்ய வேண்டுமா? இதையெல்லாம் கடைபிடியுங்கள் பாஸ்!


ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து நீங்கள் ஒரு மொபைல் போன் வாங்கினலும் அந்த மொபைல் போனில் சார்ஜ் நிற்கவில்லை என்றால் அதனால் என்ன பயன் பாஸ்.

அதேபோல ஒரு சில Mobile போன்களில் நீங்கள் மணிக்கணக்கில் Charge  ஏற்ற பிளக்கில் சொருகியிருந்தாலும் 2 அல்லது 3% சார்ஜ் ஏறியிருக்கும்.
நீங்கள் ஒரு E-mail  அல்லது SMS -ஐ படித்தாலோ உடனே போன் Switch Off ஆகிவிடும்.
இதுபோன்ற அசெளகரியமான நிலையை தவிர்க்க ஸ்மார்ட் போனில் விரைவாக சார்ஜ் செய்வது எப்படி என்ற ரகசியங்களை நீங்கள் தெரிந்து கொண்டால் உங்களை போல மகிழ்ச்சியானவர் யாரும் இல்லை.சரி!

இனி சரியான முறையில் மிக வேகமாக சார்ஜ் ஏற்றுவது எப்படி என்று பார்போமா?


Wireless Charge பயன்படுத்த வேண்டாம்

முதலில் விரைவாக சார்ஜ் செய்ய Cable  சார்ஜர்தான் பெட்டர். இதேபோல் USB சார்ஜரும் வேலைக்கு ஆகாது. வேறு வழியே இல்லாதபோது இதுபோன்ற Chargeரை பயன்படுத்தலாமே தவிர, விரைவாக சார்ஜ் ஏற வேண்டும் என்றால் சுவற்றில் இருக்கும் பிளக் மூலம் சார்ஜ் ஏற்றுங்கள்


Speed Charge தேர்வு செய்யுங்கள்...!


தற்போது கிட்டத்தட்ட அனைத்து ஸ்மார்ட் போன் உடனும் விரைவாக சார்ஜ் செய்யும் சார்ஜர்கள் இணைக்கபட்டிருக்கும். இல்லாவிட்டால்  Speed Charge ரை கடையில் கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள்.

   
சுவர் பிளக்கை மட்டும் பயன்படுத்துங்கள்




Laptop மற்றும் Computer சார்ஜ் செய்ய வேண்டாம். ஒரு ஸ்மார்ட்போனுக்கு தேவையான மின்சாரத்தை இவை கொடுக்க வாய்ப்பில்லை. எனவே சுவற்றில் பதிவு செய்யப்பட்ட பிளக்கில் மட்டுமே சார்ஜ் செய்யுங்கள்


Switch Off செய்தால் ரொம்ப நல்லது..!




முடிந்தால் சார்ஜ் செய்யும்போது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு Charge  போடுங்கள். அல்லது அட்லீஸ்ட் Flight Modeடில் வைத்தாவது சார்ஜ் போடுங்கள். ஆனால் முக்கியமான அழைப்போ அல்லது தகவலோ வரவேண்டிய நிலை இருந்தால் இவற்றை நீங்கள் தவிர்த்துவிடலாம்.


Flight Mode டில் மாற்றுங்கள்:




நீங்கள் உங்கள் மொபைல் போனை Charge போடும் முன்னர் கண்டிப்பாக ஏர்பிளேன் மோடுக்கு மாற்ற வேண்டும். ஏர்பிளேன் மோட்-ஐ ஆன் செய்வதால் உங்கள் போனில் உள்ள வயர்லெஸ் ரேடியோ உள்பட பல இணைப்புகளை கட் செய்துவிடும்.
   

Power Save Mode -ஐ ஆன் செய்யணும்:


ஒவ்வொரு ஸ்மார்ட்போனிலும் Power Save mode என்ற Option  இருக்கும். நீங்கள் இதை ஆன் செய்தால் உங்கள் Mobile போனில் உள்ள Charge  Capacity  பாதுகாக்கப்படும்.
   

தேவையில்லாததை தூக்குங்கள்..!


மேலும் உங்கள் Phone Charge இருக்கும்போது Wifi, GPS, Bluetooth ஆகியவற்றை Off செய்துவிடுங்கள். இல்லாவிட்டால் உங்கள் Mobile போனில் ஏறும் Charge யை இவைகள் சாப்பிட்டுவிடும் அபாயம் உள்ளது.

Comments

Popular posts from this blog

ஒருவர் பேசும் அழைப்புக்களை ஹேக் செய்து எமது போனில் இருந்து கேட்பது எப்படி?

Facebook அறிமுகம் செய்ய இருக்கும் புதிய Exprees Wifi வசதி...!

வாட்ஸ் அப் உரையாடல்களை அழித்துவிட்டாலும் அது முற்றிலுமாக அழியாது :  டிஜிட்டல் தடயவியல் விஞ்ஞானி தகவல்