என்ன கொடுமை சார்!… தண்ணீர் குடிக்க நினைவூட்ட புதிய ‘APP’!…
சரியான அளவு தண்ணீர் குடிப்பதை நினைவூட்ட ‘Water Your Body’ எனும் ஒரு செயலி உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் செயல்படும் இது நீங்கள் எப்போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது. WhatsAppபில் போலியான Last Seen னை உருவாக்குவது எப்படி...? முதலில் இந்தச் செயலியில் உங்கள் உடல் எடையைச் சமர்ப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் உங்களுக்குத் தேவையான தண்ணீர் அளவை அது தீர்மானித்துக்கொள்கிறது. வேகமாக ஸ்மார்ட் போனை சார்ஜ் செய்ய வேண்டுமா? இதையெல்லாம் கடைபிடியுங்கள் பாஸ்! தண்ணீர் குடிக்கப் பயன்படும் கிளாசின் அளவு, நாள் முழுவதும் நினைவூட்ட வேண்டுமா போன்ற விவரங்களைத் தெரிவித்து நமக்கேற்ப அமைத்துக்கொள்ளலாம். காலையில் 8 மணிக்கு முதல் கிளாஸ் தண்ணீர் குடித்தீர்கள் என்றால், அதன் பிறகு உங்களுக்கு நினைவு இருக்கிறதோ இல்லையோ இந்தச் செயலி அடுத்ததாக எப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் என நினைவூட்டும். Android App Download Link IPhone Download Link