Posts

Facebook அறிமுகம் செய்ய இருக்கும் புதிய Exprees Wifi வசதி...!

Image
Facebook நிறுவனம் Express Wi-Fi என்ற புதிய திட்டத்தை கிராமப்புறங்களில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஆண்டின் முற்பகுதியில் 'Free Basic' என்ற திட்டத்தைக் கொண்டு வர முயற்சித்தது. ஆனால், அந்த திட்டத்தைப் பயன்படுத்தி சில இணையதளங்களை மட்டுமே அணுக முடியும் என்று பரவலாக குற்றச்சாட்டப்பட்டதை அடுத்து, அது கைவிடப்பட்டது. தற்போது, Express Wi-Fi திட்டம் மூலம், கிராமப்புற இந்தியாவில் Internet வசதியை பரவலாக்கப் போவதாக ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது. இது தொடர்பாக இந்தியாவில் உள்ள தொலைதொடர்பு நிறுவனங்களிடம் பேசிவருகிறது. இந்த திட்டம் வரும் பட்சத்தில், வேகமான மற்றும் விலை குறைவான Internet வசதி அனைவருக்கும் கிடைக்கும் என்று கூறுகிறார்.

Vodafone Sim Upgrade செய்தால் 2G DATA இலவசம்.!!!

Image
இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பாருங்கள்..! SuperNet Vodafone கடுமையான போட்டியை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில் வோடபோன் தனது வாடிக்கையாளர்களுக்குப் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. பதிய Vodafone சலுகையானது தமிழ் நாடு, மும்பை, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சலுகையைப் பெறும் வழிமுறைகள் மற்றும் விதிமுறைகளை இங்குப் பாருங்கள்.. Prepaid வோடபோன் வழங்கும் 2ஜிபி டேட்டா பிரீபெயிட் பயனர்கள் 10 நாட்களுக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும். போஸ்ட்பெயிட் பயனர்கள் இந்தச் சலுகையினை அடுத்த மாத கட்டணம் செலுத்தும் தேதி வரை பெற முடியும் எனத் தெரிவித்துள்ளது. 4G சேவை இல்லாத வட்டாரங்களில் 3G வேகம் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வோடபோன் 4G சேவைகள் தமிழ் நாடு, பஞ்சாப், ஒடிஷா, மேற்கு உத்திர பிரதேசம், கோவா, அஸ்ஸாம் உள்ளிட்ட பகுதிகளில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அறிமுகம் வோடபோன் நிறுவனத்தின் 4G சேவைகள் கேரளா, கொல்கத்தா, கர்நாடகா, தில்லி, மும்பை, குஜராத், ஹர்யானா, கிழக்கு உத்திர பிரதேசம் போன்ற இடங்களில் வழங்கப்படுகிறது. இந்த ந...

Aircel அதிரடி அறிவிப்பு 1GB DATA வெறும் Rs:11 தமிழ் நாட்டிற்க்கு மட்டும் தான்..!

Image
தமிழ் நாட்டுப் பயனர்களுக்கு நன்மை தரும் புதிய ரீசார்ஜ் திட்டங்களை Aircel அறிவித்திருக்கிறது. இவை தமிழக வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறதாம்.. Voice மற்றும் DATA என இரண்டையும் சம அளவு பயன்படுத்தும் பயனாளிகளைக் குறிவைத்து Aircel பதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. Aircel புதிய சலுகைகள் தமிழ் நாட்டுப் பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏர்செல் அறிவித்திருக்கும் புதிய ரீசார்ஜ் திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை இங்குப் பாருங்கள்.. ஏர்செல் புதிய திட்டம் 'லிமிட் சி ஸ்யாதா' என்ற வடமொழி பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. காம்போ சலுகைகளான இவற்றின் மூலம் இரண்டு ரீசார்ஜ் திட்டங்கள் இருக்கின்றன. அவை MAHA ரீசார்ஜ் மற்றும் MEGA ரீசார்ஜ் என அழைக்கப்படுகின்றன. லிமிட் சி ஸ்யாதா MAHA ரீசார்ஜ் கட்டணம் ரூ.777/- என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பயனர்களுக்கு ரூ.700 டாக்டைம் மற்றும் 7ஜிபி அளவு 3ஜி டேட்டா வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். லிமிட் சி ஸ்யாதா MEGA ரீசார்ஜ் கட்டணம் ரூ.285/- என நிர்ணயம் செய்யப்பட்ட...

Jio 4G : மார்ச் 2017 வரை எல்லாமே இலவசம் தான்! அதிரடி அறிவிப்பு..!

Image
ஜியோ சிம் வாங்கிட்டீங்கனா, இந்தச் செய்தி உங்களுக்கானது தான். ஜியோ சிம் இலவச சேவைகளை டிசம்பர் மாதம் வரை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தக் காலக்கெடு மேலும் சில மாதங்களுக்கு நீட்டிக்கப்பட Relaince Jio தனது 4G சேவைகளை இலவசமாக வழங்கி மற்ற நிறுவனங்களின் சேவை கட்டணத்தையும் குறைக்க வைத்தது. ஜியோ பாதிப்பில் சிக்கிய நிறுவனங்கள் இன்று வரை தங்களின் சேவை கட்டணங்களைக் குறைத்து வருகின்றன. செப்டம்பர் மாதம் முதல் பல்வேறு காரணங்களைக் காட்டி புதுப்புது சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜியோ சேவைகள் அனைத்தும் இலவசமாக வழங்கும் காலக்கெடு டிசம்பர் 3 ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதாக டிராய் அறிவித்தது. இந்நிலையில்ரிலையன்ஸ் ஜியோ தனது சேவைகளை மேலும் சில காலம் வரை நீட்டிக்கலாம் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. தகவல் வெளியாகியிருக்கும் புதிய தகவல்களின் படி ரிலையன்ஸ் ஜியோ தனது டேட்டா மற்றும் வாய்ஸ் கால் சேவைகளை மார்ச் 2017 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கலாம் எனக் கூறப்படுகின்றது. வரவேற்பு   100 மில்லியன் என்ற பயனாளர் எண்ணிக்கையை அடைய ரிலையன்ஸ் ஜியோ தன...

DATA கார்டில் சிக்கனலை அதிகரிப்பது எப்படி.?

இணைய அணுகளுக்காக ஒருடேட்டா கார்ட் அல்லது USB டாங்கில் பயன்படுத்தும் பயனாளிகள் எந்த விதமான நெட்வொர்க் குறுக்கீடுகளும் இன்றி உயர்ந்த சமிக்ஞை வலிமையை அனுபவிக்க முடியும். இருப்பினும் சில சமயம் கிராமிய பகுதிகளில் வாழும் அல்லது மிகவும் நெரிசலான பகுதிகளில் உள்ள பெரும்பாலோனோர்கள் உயர் தரவு தொகுப்புகளை பயன்படுத்தும் போதும் குறைந்த இணைய அதிர்வெண் பற்றிய புகார்களை அளிக்கின்றனர். அப்படியாக, உங்கள் வீட்டு மற்றும் சமையலறை பொருட்களை பயன்படுத்தி உங்கள் சொந்த டாங்கில் டேட்டா கார்டில் சிக்கனலை அதிகரிப்பது எப்படி என்பதை பற்றிய தொகுப்பே இது..! தேவையான பொருட்கள் : உங்கள் சமையலறையில் கிடைக்கப்பெறும் ஒரு உலோக சல்லடை மற்றும் ஒரு அலுமினிய தாள். பின்னர் ஒரு சிறிய கேமரா ட்ரைபாட் மற்றும் ஒரு USB நீட்டிப்பு கேபிள். சல்லடையின் கீழே துளை : உங்கள் USB நீட்டிப்பு கேபிள் பொருந்தும் வண்ணம் ஒரு கட்டர் மூலம் சல்லடையின் கீழே ஒரு துளையை போடவும். ஆக நீங்கள் புகைப்படத்தில் தோன்றுவது போல டாங்கில் உடன் USBயை இணைத்துக்கொள்ளலாம். ஸ்டான்ட் : அடுத்து, உங்கள் கணினி அல்லது லேப்டாப்பில் இந்த USB நீட்டிப்பு ...

Google Pixel & Pixel XL போனின் சிறப்பம்சங்கள்! வாருங்கள் பார்ப்போம்..!

Image
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற விழாவில் கூகுள் நிறுவனம் பிக்ஸல் மற்றும் பிக்ஸல் XL கருவிகளை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன்களின் விலை இந்தியாவைப் பொருத்த வரை 32Gb Pixel ஸ்மார்ட்போன் ரூ.57,000 மற்றும் Pixel XL 32ஜிபி ரூ.67,000 முதல் துவங்குகின்றது. திரை மற்றும் ரெசல்யூஷன் அம்சங்களைத் தவிர மற்ற அம்சங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருக்கின்றது. இரு கருவிகளும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 821 பிராசஸர் மற்றும் 4 ஜிபி ரேம் கொண்டிருக்கின்றது. கேமராவை பொருத்த வரை 13.2 எம்பி பிரைமரி கேமராவும் 8 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. புதிய கூகுள் ஸ்மார்ட்போன்களில் சிறப்பம்சங்களைத் தவிர தனித்துவம் வாய்ந்த சில அம்சங்களும் புதிதாய் வழங்கப்பட்டுள்ளன. அவ்வாறு கூகுள் பிக்ஸல் ஸ்மார்ட்போன்களில் மட்டுமே கிடைக்கும் ஐந்து அம்சங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். மற்ற ஸ்மார்ட்போன்களில் கூகுள் போட்டோஸ் ஆப் பயன்படுத்தும் போது நீங்கள் பதிவேற்றம் செய்யும் புகைப்படங்களின் தரம் குறைக்கப்பட்ட குறைந்த ரெசல்யூஷனில் பதிவு செய்யப்படும். இவற்றைப் பெரிய திரையில் பார்க்கும் போது ப...

WhatApp பில் போலியான சேட்டிங் செய்ய வேண்டுமா? இதோ பாருங்கள்...!

Image
வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் சமூக வலைத்தளங்களின் பங்கு இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. குறிப்பாக வாட்ஸ் அப் உபயோகிக்காத நபர்களே உலகில் இல்லை என்ற நிலை வெகு சீக்கிரம் வந்துவிடும் இந்நிலையில் வாட்ஸ் அப் சேட் எந்த அளவுக்கு நமது பணிக்கும், ஃபன்னுக்கும் உபயோகமாக உள்ளதோ அதே அளவுக்கு நண்பர்களிடம் ஜாலியாக கலாய்ப்பதற்கு போலி வாட்ஸ் அப் கணக்கை ஆரம்பிக்கும் வழிகளும் தற்போது வந்துள்ளது. தற்போதை காலத்தில் எந்த பொருளாக இருந்தாலும் அதிலும் ஒரு போலி உள்ளது அல்லவா. ஃபேஸ்புக்கிலும் டுவிட்டரிலும் ஆயிரக்கணக்கான போலி பக்கங்கள் இருக்கின்றது அல்லவா. அதுபோல வாட்ஸ் அப்பில் போலி கணக்கு ஓபன் பண்ண முடியாது. ஏனெனில் இதற்கு ஒரு சிம் வேண்டும். ஆனால் அதே நேரத்தில் வாட்ஸ் அப்பில் போலி சேட்டிங் செய்யலாம். ஆனால் இந்த போலி வாட்ஸ் அப் சேட்-ஐ விளையாட்டாக பயன்படுத்துவதற்கும், ஜாலிக்கு மட்டுமே பயன்படுத்துவது நல்லது. இனி எப்படி ஃபேக் வாட்ஸ் அப் சேட்டிங் செய்வது எப்படி என்பதை பார்ப்போமா!! Step 1: Facebook, WhatsApp Chatting செய்ய நீங்கள் செய்ய வேண்டிய எளிய வேலை என்னவேன்றால் Goog...