Aircel அதிரடி அறிவிப்பு 1GB DATA வெறும் Rs:11 தமிழ் நாட்டிற்க்கு மட்டும் தான்..!




தமிழ் நாட்டுப் பயனர்களுக்கு நன்மை தரும் புதிய ரீசார்ஜ் திட்டங்களை Aircel அறிவித்திருக்கிறது. இவை தமிழக வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறதாம்..


Voice மற்றும் DATA என இரண்டையும் சம அளவு பயன்படுத்தும் பயனாளிகளைக் குறிவைத்து Aircel பதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. Aircel புதிய சலுகைகள் தமிழ் நாட்டுப் பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏர்செல் அறிவித்திருக்கும் புதிய ரீசார்ஜ் திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை இங்குப் பாருங்கள்..

ஏர்செல் புதிய திட்டம் 'லிமிட் சி ஸ்யாதா' என்ற வடமொழி பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. காம்போ சலுகைகளான இவற்றின் மூலம் இரண்டு ரீசார்ஜ் திட்டங்கள் இருக்கின்றன. அவை MAHA ரீசார்ஜ் மற்றும் MEGA ரீசார்ஜ் என அழைக்கப்படுகின்றன.



லிமிட் சி ஸ்யாதா MAHA ரீசார்ஜ் கட்டணம் ரூ.777/- என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பயனர்களுக்கு ரூ.700 டாக்டைம் மற்றும் 7ஜிபி அளவு 3ஜி டேட்டா வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.


லிமிட் சி ஸ்யாதா MEGA ரீசார்ஜ் கட்டணம் ரூ.285/- என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பயனர்களுக்கு ரூ.100 டாக்டைம் மற்றும் 1 ஜிபி அளவு 3ஜி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.

 


ரூ.777/- எனும் விலையில் 7 ஜிபி அளவு டேட்டா வழங்கும் ஏர்செல் 1ஜிபி 3ஜி டேட்டாவினை வெறும் ரூ.11/- வழங்குகிறது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு திட்டங்களும் பழைய மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.


'பெரும்பாலான இந்தியர்கள் வாய்ஸ் காலிங் மற்றும் டேட்டா சர்ஃபிங் சேவைகளை அதிகளவு பயன்படுத்த துவங்கி இருக்கின்றனர். இதனால் பயனர்களுக்குப் பயனளிக்கும் விதமாக ஏர்செல் புதிய திட்டங்களை அறிமுகம் செய்திருக்கிறது.' என ஏர்செல் நிறுவனத்தின் அனுபம் வாசுதேவ் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

ஒருவர் பேசும் அழைப்புக்களை ஹேக் செய்து எமது போனில் இருந்து கேட்பது எப்படி?

Facebook அறிமுகம் செய்ய இருக்கும் புதிய Exprees Wifi வசதி...!

வாட்ஸ் அப் உரையாடல்களை அழித்துவிட்டாலும் அது முற்றிலுமாக அழியாது :  டிஜிட்டல் தடயவியல் விஞ்ஞானி தகவல்