Jio Prime சந்தா செலுத்தும் இறுதி நாள் ஒரு மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது?
Relaince Jio அறிவித்துள்ள Prime திட்டத்திற்கான சந்தாவை செலுத்துவதற்கான இறுதி நாள் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்கப்படலா ம் என தகவல்கள் வெளியாகியுள்ளது .
மும்பை:
Relaince Jio வாடிக்கையாளர்கள ் தற்சமயம் பயன்படுத்தி வரும் புத்தாண்டு சலுகைகள் மார்ச் 31, ஆம் தேதியுடன் நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டு ள்ளது. இதன் பின் வாடிக்கையாளர்கள ் Jio சேவைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கென Jio Prime எனும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டு ள்ளது.
மார்ச் 31, ஆம் தேதிக்குள் Jio Prime திட்டத்தில் ரூ.99 செலுத்தி ஜியோ புத்தாண்டு சலுகைகள் மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டித்துக் கொள்ள முடியும்.
இந்நிலையில் தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் Jio Prime திட்டத்திற்கு பதிவு செய்யும் கால அவகாசம் ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்கப்படலா ம் என கூறப்படுகின்றது .
இதனால் ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் ஜியோ பிரைம் திட்டத்திற்கு பதிவு செய்ய முடியும் என எதிர்பார்க்கப்ப டுவதாக கூறப்பட்டுள்ளது .
எனினும் இது குறித்து ஜியோ சார்பில் எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில் லை. தற்சமயம் வரை ஜியோ பிரைம் திட்டத்திற்கு 50 சதவிகித ஜியோ வாடிக்கையாளர்கள ் பதிவு செய்துள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது . ஜியோ வாடிக்கையாளர்கள ் எண்ணிக்கை கடந்த மாதத்தில் 10 கோடியை கடந்தது.
ஜியோ பிரைம் திட்டத்திற்கு ரூ.99 செலுத்தியதும் ஜியோ பிரைம் திட்டங்களுக்கு ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும். இவற்றில் ரூ.303 கட்டணத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ், தினமும் 1 ஜிபி டேட்டா உள்ளிட்டவை வழங்கப்பட்டுகிற து. இத்துடன் ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம் என்ற சலுகையும் வழங்கப்படுகின்ற து, இதனால் வாடிக்கையாளர்கள ுக்கு கூடுதலாக 5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது .
Comments
Post a Comment