Google Pixel & Pixel XL போனின் சிறப்பம்சங்கள்! வாருங்கள் பார்ப்போம்..!
திரை மற்றும் ரெசல்யூஷன் அம்சங்களைத் தவிர மற்ற அம்சங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருக்கின்றது. இரு கருவிகளும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 821 பிராசஸர் மற்றும் 4 ஜிபி ரேம் கொண்டிருக்கின்றது. கேமராவை பொருத்த வரை 13.2 எம்பி பிரைமரி கேமராவும் 8 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.
புதிய கூகுள் ஸ்மார்ட்போன்களில் சிறப்பம்சங்களைத் தவிர தனித்துவம் வாய்ந்த சில அம்சங்களும் புதிதாய் வழங்கப்பட்டுள்ளன. அவ்வாறு கூகுள் பிக்ஸல் ஸ்மார்ட்போன்களில் மட்டுமே கிடைக்கும் ஐந்து அம்சங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
மற்ற ஸ்மார்ட்போன்களில் கூகுள் போட்டோஸ் ஆப் பயன்படுத்தும் போது நீங்கள் பதிவேற்றம் செய்யும் புகைப்படங்களின் தரம் குறைக்கப்பட்ட குறைந்த ரெசல்யூஷனில் பதிவு செய்யப்படும்.
இவற்றைப் பெரிய திரையில் பார்க்கும் போது புகைப்படங்கள் தரம் குறைவாக காணப்படும். கூகுள் பிக்ஸல் போன்களில் இவ்வாறு இல்லாமல் படமாக்கப்படும் அதே துல்லியத்துடன் பதிவேற்றம் செய்யப்படும். மேலும் இன்-லிமிட்டெட் கிளவுட் மூலம் அதிக தரத்தில் சேமித்துக் கொள்ள முடியும்.
கூகுளின் ஸ்மார்ட் ஸ்டோரேஜ் அம்சமானது போனில் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை தானாக கிளவுட் ஸ்டோரேஜிற்கு மாற்றி விடுகின்றது. இதனால் கருவியின் இன்டர்னல் மெமரி பற்றிக் கவலை கொள்ளத் தேவையில்லை.
கூகுள் வழங்கும் அன்-லிமிட்டெட் ஸ்டோரஜில் அதுவே தானாக தரவுகளைச் சேமித்து வைப்பது நல்ல விடயமாக இருக்கின்றது.
கூகுள் பிக்ஸல் மற்றும் பிக்ஸல் XL கருவிகளில் தான் முதன் முதலில் கூகுள் அசிஸ்டண்ட் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. கூகுள் அசிஸ்டண்ட் அம்சமானது குரல் மூலம் இயக்கக்கூடிய தேடு பொறி சேவை எனலாம். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைச் சார்ந்து வேலை செய்யும்.
கூகுளின் பிக்ஸல் லாண்ச்சர் பிரத்தியேகமாக பிக்ஸல் போன்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளன. இது புதுவித கூகுள் நௌ எனலாம். இந்த லாண்ச்சர் புது வகை ஆப் டிராயர், வட்ட விட ஆப் ஐகான் போன்றவற்றை கொண்டிருக்கின்றது.
புதிய கூகுள் பிக்ஸல் ஸ்மார்ட்போன்களுக்கு 24*7 சேவை மையங்களைக் கூகுள் வழங்குவதாக அறிவித்துள்ளது. இதனால் பயனர்கள் எந்நேரமும் தங்களது சந்தேகம் மற்றும் பிரச்சனைகளுக்கு நேரடியாகக் கூகுள் மூலமாகவே தீர்வு பெற முடியும்.
Watch Video
Comments
Post a Comment