Jio...Jio...Jio.....எங்கு பார்த்தாலும், ஜியோ....! ஏன் இதற்கு இவ்வளவு demand..சொல்கிறேன் கேளுங்கள்...!


ஜியோ ஜியோ ஜியோ...

எங்கு பார்த்தாலும், ஜியோ....

ஏன் இதற்கு இவ்வளவு demand...

சொல்கிறேன் கேளுங்கள்...

2014 ஆம் வருடம் மார்ச் மாதம் இந்தியாவில் உள்ள அலைக்கற்றையின் அலைவரிசையில் ஒரு மாற்றம், அது தான் 4g. 

அந்த மாற்றத்தினை நிகழ் ரூபமாக 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 முதல் airtel நிறுவனத்தால் நிறுவப்பட்டுவிட்டது. மன்னிக்கவும், தொடங்கப்பட்டுவிட்டது. 

முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி தான் ஜியோவிற்கு சொந்தமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் அதாவது 2016 ஆம் ஆண்டு relaiance நிறுவனம் தனது பங்கினை இரண்டாக பிரித்தது. அதாவது, ரிலையன்ஸ் இன் gsm ஐ ரிலையன்ஸ் 4g ஆகவும், cdma சேவையை ரத்து செய்துவிட்டு ஜியோவாகவும் மாற்றியது. 

ஜியோ ஆனது cdma தொழில்நுட்பத்தில் gsm இன் அலைக்கற்றையை பயன்படுமாறு மாற்றப்பட்டுள்ளது. 2010 ஆம் வருடம் infotel பிராட்பேண்ட் (IBSL) நிறுவனத்தை இந்திய மதிப்பில் சுமார் 4.8 கோடிக்கு வாங்கியது.

 Infotel நிறுவனம் இந்திய தலைநகரமான டெல்லியில் மட்டும் அல்லாது உலகின் 22 தலைநகரங்களில் தனது சேவையை செய்துவந்தது. 

அதனை சுருக்கி தற்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் மட்டும் பாயன்படுமாறு தற்போது அமைக்கப்பட்டுள்ளது.

24 டிசம்பர் 2015 அன்று நடிகர் ஷாருக்கான் அவர்கள் ஜியோவின் brand அம்பசிடோராக அறிவிக்கப்பட்டார்.

27 டிசம்பர் 2015 அன்று ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஆட்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினார்களுக்காக சோதனை ஓட்டமாக தனது 4g சேவையை இனிதே துவங்கியது.

Fiber optical தொழில்நுட்பத்தில் இயங்குகிறது நம்ம ஜியோ, ஒரு network கம்பெனி தனது சேவையில் fiber optical தொழில்நுட்பத்துடன் செயல்படுவது இதுவே முதல் முறை.

 காரணம் இப்போ இருக்கற சூழ்நிலையில் இன்டர்நெட்னா எல்லாருக்கும் தேவைபடுது. அதுமட்டும் இல்லாமல் இந்த ஜியோவை இலவசம்னு சொன்னா யாருதான் வங்கமாட்டாங்க.

 அதுவும் 3 மாசம் அன்லிமிடெட்சும்மா சிறுத்தை மாதிரி சீறுது இந்த ஜியோ. இன்டர்நெட்டை மையமாக கொண்டு, வேகத்தில் சாவால்விடும் ஏர்டெல்லுக்கே போட்டியா ஜியோ வந்திடுச்சு.

வியாபார உத்திகளில் இது புதுசு, ஜியோவால நாம என்ன எல்லாம் நன்மை வருதோ, அதே மாதிரிதான் ஏர்டெல், bsnl, போல மத்த கம்பெனிகளும் அடி வாங்கும், இழுத்து மூடும் நிலைமை ஏற்படும்.

 இப்போ 249 கொண்ட 1gb data pack இப்போ வெறும் 51 ரூபாய்க்கு தாராங்க airtel, ஒண்ணுமே இல்லாத மொக்க bsnl கூட ரேட் குறைச்சிடிச்சு.
ஜ்யோனால நமக்கு நல்லதோ கெட்டதோ, ஆனா ஜியோவால மத்தவங்க ரேட் குறைச்சு கொடுத்தவரைக்கும் சந்தோசம்.

இப்போ ஜியோ சிம் வாங்கியாச்சு, அத எடுத்து 1st சிம் slot ல போட்டாச்சு, activate டும் ஆயிடுச்சு, தட்டி நொறுக்கறீங்க இன்டர்நெட்டு, போன் பண்றது, மெசேஜ் அனுப்பறது, இது எல்லாமே 3 மாசம் தான், பிறகு எப்படி recharge பண்ணப்போறீங்க, எப்படி நெட் யூஸ் பண்ணுவீங்க, இதெல்லாம் நடக்காது ன்னு தூக்கி போட்டுட்டு வேற சிம் மாத்துவீங்க.

அப்போதான் தெரியும் அந்த சிம்ஓட பக்க விளைவு, நிறைய பேரு சொல்லிருக்கங்க என்கிட்டே, lyf மொபைல் ல 1st சிம் slot ல ஜியோ மட்டும் தான் வேலை செய்யுது, மற்ற சிம் போட்டால் வேலை செய்யவில்லை என்று. உண்மைதான் ஜியோ cdma தொழில்நுட்பத்தில் தான் இயங்குகிறது.

இந்த Lyf மொபைல்களில் மட்டுமல்ல எல்லா மொபைல்களிளும் உள்ளது. ஒருமுறை சிம்மை செருகிவிட்டால் அந்த குறிப்பிட்ட சிம் slot ஜியோவிற்கு அடிமையாகிவிடும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

எனவே நண்பர்களே, முயற்சி செய்து பாருங்கள், ஜ்யோவிற்காக காலைத்தைக் கடத்தவேண்டாம், நீங்க எப்பவும் போல யூஸ் பண்ற data சிம்மையே யூஸ் பண்ணுங்க, ஜியோ யூஸ் பண்றவங்க ஒரு முறை test பண்ணிட்டு என்கிட்டே சொல்லுங்க. 

நான் சொல்றது உண்மையா பொய்யான்னு.இந்த பதிவு எனது சொந்தமாக சுயநினைவுடன் பதிவிட்டது.

நன்றி நண்பர்களே...

Comments

Popular posts from this blog

ஒருவர் பேசும் அழைப்புக்களை ஹேக் செய்து எமது போனில் இருந்து கேட்பது எப்படி?

Facebook அறிமுகம் செய்ய இருக்கும் புதிய Exprees Wifi வசதி...!

வாட்ஸ் அப் உரையாடல்களை அழித்துவிட்டாலும் அது முற்றிலுமாக அழியாது :  டிஜிட்டல் தடயவியல் விஞ்ஞானி தகவல்