பிராட்பேண்ட் இணையதளத்தின் குறைந்தபட்ச வேகத்தை 4 மடங்கு வரை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்

புதுடெல்லி: தற்போது இந்தியாவில் பிராட்பேண்ட் இணையதளத்தின் வேகம் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது. குறிப்பாக, டவுண்லோடு செய்வதி்ல் இது தாமதத்தை ஏற்படுத்துகிறது.

 நாட்டில் வயர்லெஸ் நெட்வொர்க் அபரிமிதமாக முன்னேறி வரும் நிலையில் பிராட்பேண்ட் இணையதளத்தையும் தரம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சராசரி குறைந்தபட்ச பிராட்பேண்ட் இண்டர்நெட் வேகத்தில் தென் கொரியா 29 MBPS வேகத்துடன் முதலிடத்தில் உள்ளது. நார்வே 21.3 MBPS, சுவீடன் 20.6 MBPS வேகத்துடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

தற்போது இந்தியாவில் குறைந்தபட்சமாக பிராட்பேண்ட் இணையதளத்தின் வேகம் 512 KBPS ஆக உள்ளது. இதை 4 மடங்கு வரை அதிகரித்து 2 MBPS ஆக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை தகவல்தொடர்பு அமைச்சகம் செய்து வருவதாக மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

ஒருவர் பேசும் அழைப்புக்களை ஹேக் செய்து எமது போனில் இருந்து கேட்பது எப்படி?

Facebook அறிமுகம் செய்ய இருக்கும் புதிய Exprees Wifi வசதி...!

வாட்ஸ் அப் உரையாடல்களை அழித்துவிட்டாலும் அது முற்றிலுமாக அழியாது :  டிஜிட்டல் தடயவியல் விஞ்ஞானி தகவல்