Posts

Showing posts from August, 2016

Jio...Jio...Jio.....எங்கு பார்த்தாலும், ஜியோ....! ஏன் இதற்கு இவ்வளவு demand..சொல்கிறேன் கேளுங்கள்...!

Image
ஜியோ ஜியோ ஜியோ... எங்கு பார்த்தாலும், ஜியோ.... ஏன் இதற்கு இவ்வளவு demand... சொல்கிறேன் கேளுங்கள்... 2014 ஆம் வருடம் மார்ச் மாதம் இந்தியாவில் உள்ள அலைக்கற்றையின் அலைவரிசையில் ஒரு மாற்றம், அது தான் 4g.  அந்த மாற்றத்தினை நிகழ் ரூபமாக 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 முதல் airtel நிறுவனத்தால் நிறுவப்பட்டுவிட்டது. மன்னிக்கவும், தொடங்கப்பட்டுவிட்டது.  முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி தான் ஜியோவிற்கு சொந்தமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் அதாவது 2016 ஆம் ஆண்டு relaiance நிறுவனம் தனது பங்கினை இரண்டாக பிரித்தது. அதாவது, ரிலையன்ஸ் இன் gsm ஐ ரிலையன்ஸ் 4g ஆகவும், cdma சேவையை ரத்து செய்துவிட்டு ஜியோவாகவும் மாற்றியது.  ஜியோ ஆனது cdma தொழில்நுட்பத்தில் gsm இன் அலைக்கற்றையை பயன்படுமாறு மாற்றப்பட்டுள்ளது. 2010 ஆம் வருடம் infotel பிராட்பேண்ட் (IBSL) நிறுவனத்தை இந்திய மதிப்பில் சுமார் 4.8 கோடிக்கு வாங்கியது.  Infotel நிறுவனம் இந்திய தலைநகரமான டெல்லியில் மட்டும் அல்லாது உலகின் 22 தலைநகரங்களில் தனது சேவையை செய்துவந்தது.  அதனை சுருக்கி தற்போது ரிலைய

இனி வாட்ஸ்அப் தகவல்கள் அனைத்தும் ஃபேஸ்புக்கோடு இணைக்கப்படும்: தவிர்ப்பது எப்படி?

கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்ட வாட்ஸ்அப் நிறுவனத்தை கடந்த 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கிய போது பலரும் ப்ரைவசி குறித்த தங்களது கவலைகளை வெளிப்படுத்தினர். அதற்கு பதிலாக வாட்ஸ்அப் தரப்பு பயனலார்களின் தகவல்கள் ஒரு போதும் விளம்பர தேவைகளுக்காக பயன்படுத்தப்பட மாட்டாது என்றும் எப்போதும் போலவே அவர்களின் பிரைவசிக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று கூறியிருந்தது. தற்போது இதற்கு நேர் மாற்றமாக வாட்ஸ்அப் தகவல்கள் அனைத்தும் ஃபேஸ்புக்கோடு இணைக்கப்படும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் அறிவிப்பு செய்துள்ளது. இதில் ஒருவரது வாட்ஸ்அப் அலைபேசி எண், அவரது நண்பர்கள் மற்றும் அவரது தகவல்கள் அனைத்தும் ஃபேஸ்புக்குடன் பகிரப்படும். பின்னர் ஃபேஸ்புக் இந்த தகவல்களை பயன்படுத்தி தனது பக்கத்தில் ஒருவருக்கான விளம்பரங்கள், நட்புப் பட்டியல் ஆகியவற்றைக் காட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து விடுபட நினைப்பவர்களுக்கு ஒரு வாய்ப்பாக ஃபேஸ்புக் பிரவசி பாலிசியின் மாற்றத்தை பயனாளர்களிடம் காட்டி ஒப்புதல் வாங்குகிறது வாட்ஸ்அப். இதில் தங்களது வாட்சைப் தகவல்களை ஃபேஸ்புக்கோடு பகிர விருப்பமில்லை என்

WhatsApp பின் Privacy பறிக்கிறதா Facebook ? நாம் என்ன செய்யலாம்?

Image
கடந்த நான்கு ஆண்டுகளில் முதல்முறையாக தனது Privacy policy -ஐ மாற்றியிருக்கிறது வாட்ஸ் அப்.  வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தும், பயனாளிகளின் மொபைல் எண் மற்றும் அக்கவுன்ட் குறித்த தகவல்களை இனி தனது தலைமை நிறுவனமான பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ளப் போவதாக கடந்த 25-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது வாட்ஸ்அப். இதனை அடுத்து, வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு இதுகுறித்த புதிய பிரைவசி பாலிசி மற்றும் நிபந்தனைகளை அனுப்பி, நமது மொபைல் எண்ணை பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ள அனுமதி கேட்டும் வருகிறது.  இதுகுறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன? 1.வாட்ஸ் அப்பை, 19 மில்லியன் டாலர்கள் கொடுத்து பேஸ்புக் நிறுவனம் வாங்கியது நாம் அனைவரும் அறிந்ததே! எனவே வாட்ஸ் அப் குறித்த முடிவுகளையும், அதன் parent company-யான பேஸ்புக்தான் எடுக்கும். குறிப்பாக தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் எடுத்துள்ள இந்த முடிவின் காரணமாக, பேஸ்புக்கில் இனி உங்களுக்கு மிகவும் தொடர்புள்ள, நீங்கள் விருப்பம் காட்டும் வணிக  விளம்பரங்கள் வரவிருக்கின்றன. அவற்றை சந்திக்கத் தயாராக இருங்கள்! 2.நீங்கள் தாரளாமாக இந்த மொபைல் எண் பர

வாட்ஸ் ஆப்பிற்கு ஆப்பு வைப்பதற்கு வருகிறது கூகுளின் புதிய ஆப் !

கூகுள் நிறுவனம் வாஸ்ட் ஆப் போன்ற ஒரு அப்பிளிக்கேஷனை வெளியிட திட்டமிட்டுள்ளது. கடந்த வாரம் கூகுள் நிறுவனம் Duo என்ற video-calling அப்பிளிகேஷனை அறிமுகப்படுத்தியது. இது போக்கிமான் கோ கேம்மையும் பின்னுக்கு தள்ளி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் கூகுள் நிறுவனம் தற்போது வாட்ஸ் ஆப் போன்ற chat messenger அப்பிளிகேஷனை வெளியிட முடிவு செய்துள்ளது. இதற்கு Allo எனவும் பெரியரிட்டுள்ளது. இதுவும் கிட்டத்தட்ட Duo அப்பிளிகேஷனை போன்று இருந்தாலும் Allo ஆப்பில் voice message, Smart Reply, Whisper மற்றும் Shout போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், இதில் end-to-end encryption என்ற பாதுகாப்பு அம்சமும், incognito conversations என்ற மறைநிலை உரையாடல்கள் வசதியும் தரப்பட்டுள்ளது. Snap chat போன்று அனுப்பிய தகவல்கள் அதுவே அழிக்கும் வசதியும், அதனை நாம் தெரிவு செய்து கொள்ளும் அமைப்பும் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கூகுள் GTalk மற்றும் Hangouts போன்றவற்றில், இது போன்ற வசதி கொடுத்திருந்தது. ஆனால் கிட்டத்தட்ட வாட்ஸ்ஆப் போன்று Allo அப்பிளிகேஷனை கூகுள் நிறுவனம் முதன்முறையாக முயற்சி

பிராட்பேண்ட் இணையதளத்தின் குறைந்தபட்ச வேகத்தை 4 மடங்கு வரை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Image
இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க மத்திய அரசு திட்டம் புதுடெல்லி : தற்போது இந்தியாவில் பிராட்பேண்ட் இணையதளத்தின் வேகம் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது. குறிப்பாக, டவுண்லோடு செய்வதி்ல் இது தாமதத்தை ஏற்படுத்துகிறது.  நாட்டில் வயர்லெஸ் நெட்வொர்க் அபரிமிதமாக முன்னேறி வரும் நிலையில் பிராட்பேண்ட் இணையதளத்தையும் தரம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சராசரி குறைந்தபட்ச பிராட்பேண்ட் இண்டர்நெட் வேகத்தில் தென் கொரியா 29 MBPS வேகத்துடன் முதலிடத்தில் உள்ளது. நார்வே 21.3 MBPS, சுவீடன் 20.6 MBPS வேகத்துடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. தற்போது இந்தியாவில் குறைந்தபட்சமாக பிராட்பேண்ட் இணையதளத்தின் வேகம் 512 KBPS ஆக உள்ளது. இதை 4 மடங்கு வரை அதிகரித்து 2 MBPS ஆக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை தகவல்தொடர்பு அமைச்சகம் செய்து வருவதாக மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

ஏர்டெல் அதிரடி அறிவிப்பு : 10GB 4G இண்டர்நெட் ரூ.250 சலுகை...!

Image
Samsung J சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு 10GB 4G டேட்டா வழங்குவதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தச் சலுகை ஏற்கனவே ஏர்டெல் பிரீபெயிட் பயன்படுத்துவோர் மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 10 GB 4G Data பயன்படுத்த ரூ.250 செலுத்தினால் போதும். Galaxy J சீரிஸ் இந்தச் சலுகை தேர்வு செய்யப்பட்ட Samsung J சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சலுகை இருந்தும் சாம்சங் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் சார்பில் எந்தெந்த கருவிகளில் இந்தச் சலுகை வழங்கப்படும் என்ற தகவலை வழங்கவில்லை. ஏர்டெல் புதிய Galaxy J சீரிஸ் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவோர் நேரடியாக ஏர்டெல் நிலையங்களுக்குச் சென்றோ அல்லது www.offers.airtel.com என்ற இணைய முகவிரியில் லாக் இன் செய்தோ சலுகையை பெற முடியும். ஏர்டெல் 3G ஏர்டெல் 3G இண்டர்நெட் சேவையை பயன்படுத்துவோருக்கு 10GB 3G டேட்டா வழங்கப்படுகின்றது. இதில் 1 GB பகலிலும் 9 GB இரவிலும் பயன்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள டூப்ளிகேட் பைல்களை கண்டறிந்து நீக்க வேண்டுமா?

Image
எமக்கு பிடித்த பாடல்கள், திரைப்படங்கள், புகைப்படங்கள் என ஏராளமானவற்றை நாம் எமது ஸ்மார்ட்போனில் சேமித்திருப்போம் அல்லவா? சில வேளைகளில் நாம் எமது ஸ்மார்ட்போனுக்கு தரவிறக்கிய பாடல்கள், வீடியோ கோப்புக்கள் புகைப்படங்கள் போன்றவற்றை நண்பர்களிடம் இருந்தும் பெற்றிருப்போம், அல்லது பேஸ்புக், வாட்ஸ்அப்மூலம் வந்தவைகள் தானாகவே எமது ஸ்மார்ட்போனில் சேமிக்கப்பட்டிருக்கும், அல்லது நாமே அவற்றை ஒன்றுக்கு பல தடவை எமது ஸ்மார்ட்போனில் வெவ்வேறு இடங்களில் சேமித்திருப்போம். இதனால் எமது ஸ்மார்ட்போனில் உள்ள நினைவகம் எம்மை அறியாமலேயே நிரப்பப்பட்டுவிடுகிறது. எனவே இவ்வாறு ஒன்றுக்கு பல தடவை சேமிக்கப்பட்டுள்ள கோப்புக்களை கண்டறிந்து அவற்றை நீக்கிக் கொள்ள உதவுகிறது Search Duplicate File எனும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான செயலி நாம் கீழே வழங்கியுள்ள இணைப்பு மூலம் இதனை தரவிறக்கிக் கொள்ளலாம். இதன் மூலம் ஒன்றுக்கு மேலதிகமாக சேமிக்கப்பட்டுள்ள MP3 பாடல்கள், வீடியோ கோப்புக்கள், புகைப்படங்கள், ஆவணங்கள், APK கோப்புக்கள் (செயலிகள்) என எந்த ஒன்றையும் குறுகிய நேரத்திலேயே கண்டறிந்து நீக்கிக்கொள்ள முடியும். இ

பேஸ்புக்கில் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் நாம் Offline ஆவது எப்படி?

Image
பேஸ்புக் அடிக்கடி பல மாற்றங்களை செய்து வருவது நாம் அறிந்ததே. ஆனால் நிறைய மாற்றங்களை வாசர்களுக்கு தெரிவிப்பது இல்லை. அதில் சமீபத்திய ஒரு மாற்றம் தான் சில குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் நாம் Offline-இல் இருப்பதாக காண்பிப்பது இதன் மூலம் நீங்கள் ஆன்லைனில் உள்ளபோது உங்களுக்கு யாரேனும் அடிக்கடி சாட்டில் வந்து தொல்லை தந்தால் அந்த குறிப்பிட்ட நபருக்கு மட்டும் நீங்கள் Offline-இல் இருப்பதாக காட்ட முடியும். ஆனால் மற்றவர்களுக்கு நீங்கள் ஆன்லைனில் இருப்பீர்கள். முதலில் குறிப்பிட்ட நபரின் பெயர் மீது கிளிக் செய்யவும். இதற்கு அவர் ஆன்லைனில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் பெயர் லிஸ்ட்டில் இல்லை என்றால் Search-இல் பெயரை கொடுத்து தேடவும்.  இப்போது Chat Box  ஓபன் ஆகி இருக்கும். இப்போது Settings icon மீது கிளிக் செய்து வரும் மெனுவில் “Go Offine to Mister X” என்பதை கிளிக் செய்து விடுங்கள். இனிமேல் அவருக்கு நீங்கள் எப்போதும் Offline -இல் இருப்பதாகவே தெரியும். இதை மாற்ற மறுபடியும் இதே பகுதியில் வந்து Go Online என்று கொடுத்து அவருக்கு நீங்கள் ஆன்லைன் வந்து விடலாம்.

BSNL :இனி உள்நாட்டு அழைப்புக்கள் இலவசம்..!

Image
புதுடில்லி: சுதந்திரதினமான ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் லேன்ட் லைன் வாயிலாக இனி ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யும் அனைத்து உள்நாட்டு அழைப்புகளும் இலவச அழைப்புகளாக கருதப்படும் என இந்திய அரசுக்கு சொந்தமான பாரத் சன்சார் நிகாம் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, டில்லியில் உள்ள பாரத் சன்சார் நிகாம் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 'ஏற்கனவே, லேன்ட் லைன் வாயிலாக இதர தொலைத்தொடர்பு இணைப்புகளுக்கு இரவு 9 மணியில் இருந்து மறுநாள் காலை 7 மணிவரை செய்யும் அனைத்து அழைப்புகளையும் இலவச அழைப்புகளாக பி.எஸ்.என்.எல். கணக்கிட்டு வருகிறது. இந்நிலையில், வாடிக்கையாளர்கள் நலன்கருதி சுதந்திர தினமான வரும் 15-ம் தேதியில் இருந்து பி.எஸ்.என்.எல். லேன்ட் லைன் இணைப்பு வாயிலாக நாட்டில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு இணைப்புகளுக்கும் இனி ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யும் உள்நாட்டு அழைப்புகள் யாவும் இலவச அழைப்புகளாக கருதப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுதந்திரதின சிறப்பு சலுகையாக ஆகஸ்ட் 15-ம் தேதியில் இருந்து நவம்பர் 14-ம் தேதிவரை புதிய லேன்ட் லைன் இணைப்புகளை பெறும் வ

How to Use Copy- Screen text Pro (Tamil Video Watch)

Step 1: Take a screenshot. Step 2: Open that screenshot and share with this app. Step 3: Drag the corners to select the text and also select language to OCR then save. Step 4: Please wait while the app performs OCR (Optical Character Recognition) operation to extract the text. Step 5: Now you may copy to clipboard or share the extracted text. App Download Link

வாட்ஸ்அப் சேவையில் ஒரே நேரத்தில் பலருக்கு forward செய்யும் புதிய வசதி அறிமுகம்..!

Image
வாட்ஸ்அப் பற்றி அறியாதவர்கள் யார் தான் இருக்க முடியும். வாட்ஸ்அப் சேவையானது புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் அது இன்றுவரை மெசேஜிங் சேவையில் முன்னிலை வகித்து வருகிறது. அந்தவகையில் வாட்ஸ்அப் பயனர்களை குதூகலிக்கச் செய்யும் மற்றுமொரு வசதியும் இதில் அறிமுகப்படுத்தப்பட்ட்டுள்ளது. அதாவது வாட்ஸ்அப் மூலம் பெறப்பட்ட ஒரு செய்தியை பலருக்கு அனுப்பவேண்டிய (Forward) தேவை ஏற்பட்டால் நாம் அவற்றை தனித்தனியாகவே ஒவ்வொருவருக்கும் அனுப்பி வந்தோம் என்றாலும் இதன் பின்னர் அவ்வாறான சிரமங்கள் உங்கள் இருக்காது. மாறாக குறிப்பிட்ட செய்தியை ஒரே நேரத்தில் பலருக்கு அனுப்பி வைக்கக்கூடிய புதிய வசதி இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை வாட்ஸ்அப் செயலியின்  2.16.230 எனும் பதிப்பில் பெற்றுக்கொள்ளலாம். இந்த பதிப்பு இதுவரை கூகுள் ப்ளே ஸ்டோரில் அறிமுகப்படுத்தப்படவில்லை. இருந்த போதிலும் இதனை கீழுள்ள  இணைப்பை பயன்படுத்தி APK மிர்ரர் தளத்தில் இருந்து இதனை தரவிறக்கிக்கொள்ளலாம். WhatsApp 2.16.231 Version Download

YouTube வீடியோ கோப்புக்களை Mp3 வடிவத்துக்கு மாற்றி தரவிறக்க வேண்டுமா?

Image
இணையத்தில் வீடியோ பார்க்க வேண்டும் என்றால் அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது யூடியூப் தளம் தான். இதில் எமக்குத் தேவையான எந்த ஒரு வீடியோ கோப்பையும் மிக இலகுவாக தேடி அதனை பார்க்க முடியும். எனினும் இதில் இருக்ககூடிய வீடியோ கோப்புக்களை தரவிறக்கிக் கொள்வதற்கான வசதியுயோ அல்லது அவற்றை Mp3 வடிவத்திற்கு மாற்றிக் கொள்வதற்கான வசதியோ யூடியூப் தளத்தில் இல்லை. என்றாலும் பல்வேறு வழிமுறைகளில் யூடியூப் தளத்தில் இருக்கும் வீடியோ கோப்புக்களை தரவிறக்கிக் கொள்ளவும் அவற்றை Mp3 வடிவத்திற்கு மாற்றி தரவிறக்கிக் கொள்ளவும் முடியும். அந்த வகையில் யூடியூப் தளத்தில் இருக்கும் ஒரு வீடியோ கோப்பை நீங்கள் தரவிறக்க விரும்பினால் அல்லது அதில் வரக்கூடிய இசையை அல்லது படலை MP3 வடிவத்துக்கு மாற்றி தரவிறக்க விரும்பினால் எவ்வித மூன்றாம் நபர் செயலிகளையும் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாறாக அந்த வீடியோ கோப்பின் இணைய முகவரியில் வரும் ( www.youtube.com /xxxxxxx ) ube என்பதை மாத்திரம் நீக்கிவிட்டால் போதும். இனி அது ( www.yout.com /xxxxxx) எனும் தளத்துக்கு மாற்றப்படும் பின்னர் அதனை உடனடியாக தரவிறக்கிக் கொள

How to Create Mobile Application? Details?

Image
ஆன்லைன் கல்வி திட்டத்தில், மொபைல் ஆப் உருவாக்குவது எப்படி என்பது குறித்த புதிய படிப்பை, சென்னை ஐ.ஐ.டி., உருவாக்கியுள்ளது. மத்திய அரசு, அனைத்து தரப்பு மக்களுக்கும், தொழில்நுட்பம் சார்ந்த, தற்போதைய வளர்ச்சிக்கு ஏற்ற படிப்புகளை நடத்த, திறந்தவெளி ஆன்லைன் படிப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதற்கான அனுமதியை சில வாரங்களுக்கு முன், பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., வழங்கியது. இதையடுத்து, இந்திய உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, சென்னை ஐ.ஐ.டி., மொபைல் ஆப் குறித்த படிப்பை அறிமுகம் செய்துள்ளது. இந்த படிப்பை யார் வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் படிக்கலாம்; படிப்புக்கு கட்டணம் கிடையாது. ஆனால், தேர்வுக்கும், ஐ.ஐ.டி.,யின் சான்றிதழ் பெறவும் கட்டணம் உண்டு. சென்னை ஐ.ஐ.டி.,யின் www.imad.tech  என்ற இணையதளத்தில், விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்யலாம். அவர்களின் இ - மெயில் முகவரிக்கு, பாடங்கள் வீடியோவாக அனுப்பப்படும். இணைய தளம் மூலம் அதற்கான இணைப்பை பயன்படுத்தி படிக்கலாம். மொபைல் அப்ளிகேஷன் என்ற, மொபைல் ஆப் அனைத்து வகையிலும் பயன்படும் நிலையில், அதை தங்களுக்கு தாங்களே உருவாக்கி கொள்ளு

WhatsApp Goupபில் Invite Link கை எப்படி Create செய்வது?

Image
பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த WhatsApp இல்லதவர்கலே இல்லை  நம் உறவினர்கள் மற்றும் நம் நண்பர்கள் ஆகியவர்க்கு WhatsApp பில் Group உருவாக்கி தேவை படும் போதல்லாம் உருஞ்செய்திகை அனுப்பி மகிழ்கின்றோம். இப்பொது WhatsApp Prime யில் வெளியாகி இருக்கும் Group Invite Link Created அதாவது நாம் குரூப்பில் Admin ஆக இருந்தால் அதில்லுள்ள Invite linkகை எடுத்து மற்ற நண்பர்கள் மற்றும் உறவினர்களை அந்த Link கின் முலம் Join பண்ணலாம். Group Link கை Create செய்வது எப்படி? 1) முதலில் உங்கள் WhatsApp கணக்கை Backup செய்து கொள்ள வேண்டும். 2) அடுத்து உங்கள் WhatsApp பை Uninstall செய்ய வேண்டும்.       WhatsApp Prime Download 3) பிறகு புதிதாக வந்திருக்கும் WhatsApp Prime Version னை Install செய்ய வேண்டும். 4) அடுத்து WhatsApp கணக்கை Verify செய்த பிறகு உங்க Message Backup Option வரும் அதில் Backup பை தேர்வு செய்ய வேண்டும். 5) நீங்கள் முன்னதாகவே Group பில் Admin என்றால் Groupபை open செய்து Group Info க்கு செல்ல வேண்டும். 6) அதில் Add Members Option னை தேர்வு செய்தா

Android Battery இன் மின் சக்தியை சேமிப்பது எப்படி?

Image
Battery இன் மின் சக்தியை சேமிப்பது எப்படி (அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விவரம்) நாம் மின் சக்தியை சேமிக்கும் விதத்தை அறிவதற்கு முன் அது எவ்வாறெல்லாம் வீணாகிறது என்பதை பற்றி தெரிந்துகொள்வோம். ((1)). மொபைல் 2g network இல் இருப்பதை விட 3g network இல் அதிக மின் சக்தியை இழக்கிறது ஆதலால் charge செய்ய முடியாத சூழலில் மொபைலை 2g network ல் வைத்து இயக்குவது மிகவும் நல்லது. 3g network ல் அதிகமானா உஷ்னத்தை உங்கள் மொபைல் வெளிப்படுத்தினால் அதை உடனடியாக அனைத்து வைப்பது சிறந்தது. ((2)) application களை அதிகமாக இயக்கும்பொழுது மின் சக்தி வேகமாக குறைகிறது ஆதலால் வெளி இடங்களில் இருக்கும்பொழுது தேவையான application ஐ மட்டும் இயக்குவது சிறந்தது. ((3)) wifi மற்றும் ப்ளுடூத் ஆகியவற்றின் செயலுக்கு இடையில் அதிக மின் சக்தி இழக்கப்படும். ஆதலால் Bluetooth head phone களை அதிகம் பயன்படுத்த வேண்டாம் wifi ஐ உபயோகித்து முடித்த உடன் அதை அனைத்து வைப்பது சிறந்தது இது Bluetooth ற்க்கும் பொருந்தும். ((4)) நாம் இருக்கும் இடத்தில் அலைவரிசை அதாவது signel குறைந்து காணப்பட்டால் அப்பொழுது நமது மொபைலின் கதி

வாட்ஸ் அப் உரையாடல்களை அழித்துவிட்டாலும் அது முற்றிலுமாக அழியாது :  டிஜிட்டல் தடயவியல் விஞ்ஞானி தகவல்

Image
வாட்ஸ் அப் உரையாடல்களை நாம் அழித்துவிட்டாலும் அது முற்றிலுமாக அழியாது என இண்டெர்நெட் வல்லுனர் ஒருவர் கண்டறிந்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.  வாட்ஸ் அப் மூலம் மேற்கொள்ளப்படும் உரையாடல்கள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் என்கிரிப்ட் செய்யப்படுகிறது. இதன் மூலம் 3ம் நபர் அறியாத வகையில் பாதுகாப்பான உரையாடல் நடைபெறும் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் வாட்ஸ் அப் உரையாடல்களை நாம் அழித்துவிட்டாலும் அது முற்றிலுமாக அழியாது என இண்டெர்நெட் வல்லுனர் ஒருவர் கண்டறிந்துள்ளார். இந்நிலையில் டிஜிட்டல் தடயவியல் விஞ்ஞானியான ஜோனதன் ஸ்ட்டிஜிர்ஸ்கி வாட்ஸ் அப் உரையாடல்களை நாம் டெலிட் செய்தாலும் அந்த உரையாடல்கள் முற்றிலுமாக அழிந்துவிடாது என அதிர்ச்சி தருகிறார்.. உரையாடல்களை அழிக்கும் போது அழிந்தது என காட்டினாலும், அழிக்கப்பட்ட டேட்டா பகுதி மீது புதிய உரையாடல்கள் பதிவு ஆவதில்லை என்பதை கண்டறிண்ட்துள்ளார்.  இதன் மூலம் மென்பொருள் உபயோகித்து அழிக்கப்பட்ட உரையாடல்களை மீட்கலாம் என்றும், மேலும் வாட்ஸ் அப் நிறுவனம் தனது அடுத்த பதிப்புகளில் இந்த தவறினை சரிசெய்யும் என எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.