Google அறிமுகப்படுத்தியிருக்கும் புத்தம் புதிய சேவை! வாருங்கள் இன்றே பயன்படுத்தலாம்!



கூகுள் அதன் பயனர்களுக்கு ஸ்பேஸ் (Space) எனும் புதியதொரு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த வசதி மூலம் ஒரே நேரத்தில் பலர் இணைந்து தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியும்.

எந்த ஒருவராலும் ஒரு குழுவை உருவாக்கி அதில் கருத்துக்கள், புகைப்படங்கள், வீடியோ கோப்புக்கள், இணைய இணைப்புகள் என எந்த ஒன்றையும் பகிர முடியும்.

மேலும் குழு உருவாக்கப்பட்டதன் பின்னர் பெறப்படும் அழைப்பு விடுப்பதற்கான இணைப்பை (Invite Link) நண்பர்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களால் உங்கள் குழுவில் இணைய முடியும்.

இந்த வசதியை நேரடியாக கணினி மூலம் பயன்படுத்திக் கொள்ள முடிவதுடன் ஆண்ட்ராய்டு, ஐபோன் மூலம் பயன்படுத்துவதற்கான செயலிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கீலே வழங்கியுள்ள சுட்டி மூலம் இந்த செயலிகளை தரவிரக்கிக் கொள்ளலாம்.

உங்கள் குழுவில் இணையும் எந்த ஒருவராலும் ஏனைய உறுப்பினர்களுடன் தகவல்களை பகிர முடியும்.

ஸ்பேஸ் (Space) செயலியின் மத்தியில் தரப்பட்டுள்ள பட்டனை சுட்டுவதன் மூலம் இணையதளங்கள், யூடியூப் வீடியோ கோப்புக்கள் போன்றவற்றை நேரடியாக இணையத்தில் இருந்து தேடிப்பெற்று அவற்றை உடனுக்குடன் பகிர்ந்துகொள்வதற்கான வசதி இந்த செயலியில் தரப்பட்டுள்ளது.

மேலும் பகிரப்படும் தகவல்களுக்கு குழுவில் உள்ள எந்த ஒரு உருப்பினராலும் கருத்துக்களை தெரிவிக்க முடிவதுடன் ஓட்டுக்கள் (Sticker), புகைப்படங்கள், இணைய இணைப்புகள் போன்றவற்றை கருத்துரையாக (Comment) இடவும் முடியும்.



அதே நேரம் குழுவில் உள்ள உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு செயற்பாடுகளையும் Spaces Activity எனும் பகுதியின் மூலம் அவதானிக்கவும் முடிகிறது.

எனவே கூகுள் கணக்கை பயன்படுத்தி கூகுளின் இந்த புதிய ஸ்பேஸ் (Space) சேவையை உங்களாலும் இன்றே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Android Download Link

Comments

Popular posts from this blog

ஒருவர் பேசும் அழைப்புக்களை ஹேக் செய்து எமது போனில் இருந்து கேட்பது எப்படி?

Facebook அறிமுகம் செய்ய இருக்கும் புதிய Exprees Wifi வசதி...!

வாட்ஸ் அப் உரையாடல்களை அழித்துவிட்டாலும் அது முற்றிலுமாக அழியாது :  டிஜிட்டல் தடயவியல் விஞ்ஞானி தகவல்