நீங்கள் மலையில் நனைந்ததால் உங்களது மொபைல் போனில் நீர் உட்புகுந்து விட்டதா? அல்லது உங்கள் கையில் இருந்த மொபைல் போன் நழுவி நீரினுள் விழுந்துவிட்டதா?
இது போன்ற இன்னும் பல காரணங்களால் எமது மொபைல் போனிற்குள் நீர் சென்றுவிடுவதுண்டு. இவ்வாறான சந்தர்பங்களில் நீரினால் பாதிக்கப்பட்ட மொபைல் போனை உடனடியாக நாம் பயன்படுத்த முனைந்தால் அது தோல்வியிலேயே முடிவடையும். நீரில் விழுந்த போனை மீட்பது எப்படி? எனவே பின்வரும் வழிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் நீரினால் பழுதடைந்த உங்கள் மொபைல் போனை செயற்படும் நிலைக்கு கொண்டுவரலாம். 1. மேற்குறிப்பிட்ட முறையிலோ அல்லது வேறேதும் முறைகளிலோ உங்கள் மொபைல் போன் நீரில் விழுந்திருந்தால் அதனை முடியுமான வேகத்தில் நீரிலிருந்து எடுத்துவிடுங்கள். 2. நீர் உட்புகுந்த பின்பும் அது இயங்கும் நிலையில் இருந்தால் தாமதிக்காமல் அதனை ஸ்விட்ச் ஆப் செய்துவிடுங்கள். ஒருவேளை அது இயங்காமல் இருந்தால் அது இயங்குகின்றதா? என சோதிப்பதற்கு அதனை ஸ்விட்ச் ஆன் செய்யவும் வேண்டாம். 3. மொபைல் போனின் திரைக்கு Screen Protector ஒட்டப்பட்டிருந்தால் அதனை நீக்கி விட்டு பருத்தித் துணியை கொண்டு அதன் வெளிப்புறத்தை துடைத்து விடுங்கள். 4. பின் மொபைல் போனின் கவர், பேட்டரி, சிம் மற்றும் மெமெரி கார்ட் போன்ற அனைத்தையும் அதிலிருந்து அகற்றி விடுக.