உங்களுக்குத் தேவையான எந்த ஒன்றையும் இந்த Keyboard மூலமே தேடிப்பெறலாம்

அண்மையில் ஜிபோர்டு எனும் ஒரு கீபோர்டு செயலியை கூகுள் நிறுவனம் ஐபோன் சாதனங்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்தது.

குறிப்பிட்ட கீபோர்டு செயலி மூலம் அருகில் இருக்கக்கூடிய உணவகங்கள், வீடியோ கோப்புக்கள், புகைப்படங்கள், அனிமேஷன் படங்கள், காலநிலை தகவல்கள், செய்திகள், ஸ்கோர் விபரங்கள், இமொஜிகள் உட்பட எந்த ஒன்றையும் கீபோர்டு செயலி மூலமே தேடிப்பெறவும் அவற்றை நண்பர்களுடன் பகிரவும் முடிந்தது.

என்றாலும் இதனை ஆரம்பகட்டமாக ஐபோன் சாதனங்களுக்கு மாத்திரமே வெளியிட்டிருந்தது (ஆண்ட்ராய்டு செயலி விரைவில் வெளியிடப்படும்).

இருப்பினும் மேற்குறிப்பிட்ட பல வசதிகளை ஸ்லேஷ் எனும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களுக்கான கீபோர்ட் செயலி மூலமும் பெற்றுக்கொள்ள முடியும். இதனை கீலுள்ள இனைப்பு மூலம் தரவிரக்கிக் கொள்ளலாம்.

இந்த கீபோர்ட் செயலியின் கீழ் பகுதியில் வழங்கப்பட்டுள்ள ஸ்லேஷ் (/) குறியீட்டை சுட்டிய பின்னர் பொருத்தமான குறிச்சொற்களை உள்ளிடுவதன் ஊடாக வெவ்வேறு அம்சங்களை தேடிப்பெறவும் அவற்றை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் முடியும்.

உதாரணத்திற்கு இந்த கீபோர்டு செயலி மூலம் அனிமேஷன் படங்களை தேடிப்பெற விரும்பினால்  ஸ்லேஷ் (/) குறியீட்டுடன் Giphy என தட்டச்சு செய்ய வேண்டும் பின்னர் உங்களுக்குத் தேவையான அனிமேஷன் படங்களை குறிப்பிட்ட கீபோர்டு செயலி மூலமே நேரடியாக தேடிப்பெறலாம்.

அதேபோல் கூகுள் தேடல் ஒன்றை மேற்கொள்ள Google எனவும் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள புகைப்படங்களை தேடிப்பெற Photos எனவும் இடங்களை குறிப்பிட்டுக் காட்ட Maps எனவும் யூடியூப் வீடியோ கோப்புக்களை தேடிப்பெற YouTube எனவும் வெவ்வேறு குறிச்சொற்களை உள்ளிடலாம்.

இன்று பொதுவாக அனைவராலும் பயன்படுத்தப்பட்டுவரும் பேஸ்புக் மெசெஞ்சர், வாட்ஸ்அப், வைபர், டெலிகிராம் போன்ற மெசெஞ்சர் சேவைகளை பயன்படுத்தும் போது இந்த கீபோர்ட் செயலியானது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையலாம். அண்மையில் வைபர் சேவையில் அனிமேஷன் படங்களை பகிர்வதற்கான வசதி வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

எனவே ஒரு புதிய அனுபவத்தை வழங்கக்கூடிய இந்த செயலியை நீங்களும் பயன்படுத்திதான் பாருங்களேன்.

Comments

Popular posts from this blog

ஆன்ராயிடு போனில் அதிகளவில் மொபைல் டேட்டா வீணடிக்கப்படுகிறதா? இதோ தீர்வு..!

Facebook அறிமுகம் செய்ய இருக்கும் புதிய Exprees Wifi வசதி...!

Google Pixel & Pixel XL போனின் சிறப்பம்சங்கள்! வாருங்கள் பார்ப்போம்..!