Google Pixel & Pixel XL போனின் சிறப்பம்சங்கள்! வாருங்கள் பார்ப்போம்..!
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற விழாவில் கூகுள் நிறுவனம் பிக்ஸல் மற்றும் பிக்ஸல் XL கருவிகளை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன்களின் விலை இந்தியாவைப் பொருத்த வரை 32Gb Pixel ஸ்மார்ட்போன் ரூ.57,000 மற்றும் Pixel XL 32ஜிபி ரூ.67,000 முதல் துவங்குகின்றது. திரை மற்றும் ரெசல்யூஷன் அம்சங்களைத் தவிர மற்ற அம்சங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருக்கின்றது. இரு கருவிகளும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 821 பிராசஸர் மற்றும் 4 ஜிபி ரேம் கொண்டிருக்கின்றது. கேமராவை பொருத்த வரை 13.2 எம்பி பிரைமரி கேமராவும் 8 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. புதிய கூகுள் ஸ்மார்ட்போன்களில் சிறப்பம்சங்களைத் தவிர தனித்துவம் வாய்ந்த சில அம்சங்களும் புதிதாய் வழங்கப்பட்டுள்ளன. அவ்வாறு கூகுள் பிக்ஸல் ஸ்மார்ட்போன்களில் மட்டுமே கிடைக்கும் ஐந்து அம்சங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். மற்ற ஸ்மார்ட்போன்களில் கூகுள் போட்டோஸ் ஆப் பயன்படுத்தும் போது நீங்கள் பதிவேற்றம் செய்யும் புகைப்படங்களின் தரம் குறைக்கப்பட்ட குறைந்த ரெசல்யூஷனில் பதிவு செய்யப்படும். இவற்றைப் பெரிய திரையில் பார்க்கும் போது ப...



Comments
Post a Comment