BSNL அதிரடி :  வரம்பற்ற DATA, 24 மணி நேர இலவச Voice Calls..!


நேற்றுவரை இந்தியாவின் முன்னணி நெட்வெர்க்குகளாக இருந்த நிறுவனங்கள் எல்லாம் இன்று தங்களை சந்தையில் தக்கவைத்துக் கொள்ள போரடிக்க கொண்டிருக்கின்றன. 
வாடிக்கையாளர்களை ஆக்கிரமிக்கும் அளவிற்கு ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் சலுகைகள் தான் அதற்கெல்லாம் காரணம்..!

ஏர்டெல், ஐடியா போன்ற நிறுவனங்களே ஜியோ அலைக்குள் சிக்கி சலுகைகளை வாரி வழங்கி கொண்டிருக்க, நிலையை தக்கவைத்துக்கொள்ள பிஎஸ்என்எல் தன் பங்கிற்கு அதிரடி சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.


காம்போ சலுகை :

ரிலையன்ஸ் ஜியோவிற்கு சற்று போட்டியளிக்கும் வண்ணம் பிஎஸ்என்எல் தனது பிராட்பேண்ட் காம்போ சலுகை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
  

வரம்பற்ற டேட்டா :

அந்த காம்போ சலுகையில் 2 எம்பிபிஎஸ் வேகத்திலான வரம்பற்ற டேட்டா மற்றும் அனைத்து பகுதிகளும் 24 மணி நேர இலவச வாய்ஸ் கால்ஸ் வழங்கப்படுகிறது.


விலை :

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த பிராட்பேண்ட் காம்போ சலுகையின் விலை ரூ.1199/- என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


உயர் மதிப்பு :

'பிபிஜி காம்போ யூஎல்டி 1199' என்ற இந்த புதிய திட்டமானது 10 மில்லியன் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள் உயர் மதிப்பு பிராட்பேண்ட்களில் சந்திக்கும் சிக்கல்களை சரி செய்ய உதவும் என்று பிஎஸ்என்எல் நம்பிக்கை அளித்துள்ளது.


எதிர்பார்க்கப்பட்டது :

பிஎஸ்என்எல்-ன் இந்த நடவடிக்கையானது ரிலையன்ஸ் ஜியோவின் வரம்பற்ற டேட்டா மற்றும் வாய்ஸ் கால்ஸ் சலுகை வெளியான நாளில் இருந்தே எதிர்பார்க்கப்பட்டது.


இந்த புதிய திட்டம் சார்ந்த குறுகிய விளக்கம் :

விலை ரூ.1199, அனைத்து பிஎஸ்என்எல் வட்டாரங்களிலும் புதிய மற்றும் தற்போதுள்ள வாடிக்கையாளர்கள் இருவர்களுக்கும் இந்த சலுகை கிடைக்கும், நிறுவலுக்கு கட்டணம் கிடையாது.

Comments

Popular posts from this blog

ஆன்ராயிடு போனில் அதிகளவில் மொபைல் டேட்டா வீணடிக்கப்படுகிறதா? இதோ தீர்வு..!

Facebook அறிமுகம் செய்ய இருக்கும் புதிய Exprees Wifi வசதி...!

Google Pixel & Pixel XL போனின் சிறப்பம்சங்கள்! வாருங்கள் பார்ப்போம்..!